ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...
நவீன மயமாகும் சென்னை பேருந்து நிறுத்தங்கள்

சென்னை மாநகர பேரூந்து நிறுத்தங்களை உலகத் தரத்துடன் அமைக்கும் திட்டத்தை திருவல்லிக்கேணியில் மேயர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். வாலாஜா சாலையில் அமைக்கப்படும் நவீன பேருந்து நிறுத்தப் பணிகளை மேயர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, சென்னை நகர அனைத்து பேருந்து நிறுத்தங்களையும் தனியார் பங்களிப்புடன் கட்டுதல், பராமரித்தல், பின்னர் ஒப்படைத்தல் என்ற அடிப்படையில் நவீன பேருந்து நிறுத்த நிழற்குடைகளாக அமைக்க முடிவெடுக்கப்பட்டது. மாநகராட்சிக்குட்பட்ட 741 நிழற்குடைகளையும், மாநகர போக்குவரத்து கழகத்திற்குட்பட்ட 500 நிழற்குடைகளையும் சேர்த்து மொத்தம் 1241 பேருந்து நிறுத்தங்கள் உலகத்தரமுள்ளவையாக அமைக்கப்படும்.

முதற்கட்டமாக 741 நிழற்குடைகளில் 99 நிழற்குடைகளை அமைக்க பணிகள் துவங்கப்பட்டுள்ளன. ஒப்பந்தம் பெற்ற நிறுவனம் புதிதாக கட்டப்படும் நிழற்குடையில் 180 சதுர அடியில் விளம்பரம் செய்துகொண்டு அதிலிருந்து வரும் வருவாயில் சென்னை மாநகராட்சிக்கு ஒவ்வொரு வருடமும் ரூ. 2 கோடியே 4 இலட்சம் சலுகைத் தொகையாக வழங்க வேண்டும்.
மேலும் 5 சதவிகிதம் இரண்டாம் ஆண்டிலிருந்து அதிகரித்து கூடுதலாக மாநகராட்சிக்கு செலுத்துவார்கள். ஒப்பந்த காலமான 10 வருடங்களுக்குப் பிறகு நிழற்குடைகளை சென்னை மாநகராட்சிக்கு நல்லநிலையில் ஒப்படைக்க வேண்டும். மீதமுள்ள 642 பேருந்து நிழற்குடைகளை கட்டவும் ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன.
சென்னை மாநகரிலுள்ள 1241 பேருந்து நிறுத்தங்களும் ஒரு வருடகாலத்திற்குள் நவீன பேருந்து நிறுத்தங்களாக மாற்றி அமைக்கப்படும். இப்பேருந்து நிழற்குடைகள் துருப்பிடிக்காத வகையில் உருவாக்கப்படும். பயணிகளின் வசதிக்காக தரமான இருக்கைகள், கடிகாரம், பேருந்து காலட்டவனை மற்றும் பொது அறிவிப்புகள் போன்றவைகள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக