ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

விஸ்பரூபம்.. முஸ்லிம்களே தீர்வு என்ன ?

உணர்ச்சிகள் தூண்டபடுவதால் நீதியை மறந்து விட வேண்டாம் .!

கோயில் இடம் பெரும் காட்சியாக இருந்தால் மணி ஓசையும், தண்ணீர் தடாகமும், அமைதியான (?) பிராமன பூசாரியையும் காட்சிப்படுத்துவார்கள்.

கிருத்தவ தேவாலயமாக இருந்தால் அமைதியாக சூழலும், வெள்ளை ஆடையில் அமைதியான தோற்றத்தில் ஒரு பெரியவரும், பைபிலின் காட்சியம் சித்தரிக்கப்படும்.

இதுவே பள்ளிவாயலாக இருந்தால் ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளுக்கு அடைக்களம் கொடுக்கும் இடமாகவும், திருமறைக் குர்ஆனை ஓதிக் கொண்டே பொது மக்களை கொலை செய்யும் மனிதர்களும் தான் காட்டப்படுவார்கள். ஏன் இந்த இஸ்லாமிய எதிர்ப்பு வெறி? ஏன் இந்த துவேஷப் பார்வை?



ஆரம்ப காலத்தில் ஊதுபத்தி கொழுத்துபவர்களாகவும் தர்காக்களில் மந்திரிப்பவர்களாகவும், பேய் ஓட்டுபவர்களாகவும் காட்டப்பட்ட முஸ்லிம்கள் இன்று தெளிவாக தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். முஸ்லிம்களின் நல்ல பண்புகள் எதுவும் இதுவரைக்கும் சினிமாக்களில் காட்டப்பட்டதில்லை. இதற்கு எதிராக யாராவது பேசினால் கருத்து சுதந்திரத்தை எதிர்க்கிறார்கள் என்ற பெயரில் அதே முஸ்லிம்கள் மீது பழி போடப்படுவது வேடிக்கையாக இருக்கிறது.

2 கருத்துகள்:

  1. //முஸ்லிம்களின் நல்ல பண்புகள் எதுவும் இதுவரைக்கும் சினிமாக்களில் காட்டப்பட்டதில்லை.// முஸ்லிம்களின் நல்ல பண்புகளைத்தான் இஸ்லாமிய தீவிரவாதிகளும் அவர்களுக்கு ஆதரவளிக்கும் கூட்டமும் தூக்கி சப்பிட்டுவிடுகிறதே.

    பதிலளிநீக்கு
  2. though i am kamal fan and i am non muslim. I support muslim in this aspect...

    பதிலளிநீக்கு