ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து சுதந்திரம்.. பத்தி பேசுற... பெரியோர்களே.. இல்லை இல்லை... மிக பெரியோர்களே... இந்த வீடியோ க்ளிப்ஸ் பாருங்க., சினிமா உலகத்தின் இரட்டை வேடம்






விஸ்வரூபம் படம் தடை பற்றி கருத்து சுதந்திரம் பாழாகிவிட்டது என்று மார்தட்டுபவர்களுக்கு ஒரு நினைவூட்டல். தினமலர் நடிகைகளை பற்றி எழுதியபோது எங்கே போனது கருத்து சுதந்திரம்? இந்த வீடியோவில் உள்ள பேச்சுகளை கேளுங்கள். உங்கள் உணர்வு பாதிக்கபட்டால் கொதித்து எழுவீர்கள். முஸ்லிம்களின் உணர்வுகள் பாதிக்கப்பட்டால் அதற்கு பெயர். கருத்து சுதந்திரத்திற்கு எதிரான செயல்பாடு.. ஏன் இந்த இரட்டை வேடம்? உங்களுக்கு என்றால் ஒரு நியாயம் அடுத்தவர்க்கு என்றால் வேறு நியாயமா?


சிந்திக்க கடமைப்படுங்கள்... விஸ்வரூபம் குறித்து கூட எந்த முஸ்லிமும் இந்த அளவிற்கு கேவலமாக பேசவில்லை... சமூக அர்வலர்களா இவர்கள்.. இவர்கள் கையில் இன்றைய வலிமை வாய்ந்த ஊடகம்...

வாழ்க தமிழகம்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக