முஸ்லிம் தீவிரவாத குழுவின் தலைவன் (தலிபான்) முல்லா உமர் குறித்த தகவல்களை கமலிடம் கேட்டுப் பெற வேண்டும். அதுகுறித்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற ஆரம்பித்துள்ளது. யார் இந்த முல்லா உமர்.. இதென்ன புது கலாட்டா? என்று சிலர் கேட்கக் கூடும். முல்லா உமர் தலிபான்களின் தலைவர். 1996 முதல் 2001 வரை இவர்தான் ஆப்கானிஸ்தான் தலிபான் அரசின் தலைவராக இருந்தார். சுப்ரீம் கவுன்சில் எனப்பட்ட ஆப்கானிஸ்தானின் அதியுயர் ஆட்சிமன்றக் குழு தலைவராகவும் தன்னை அறிவித்துக் கொண்டார். அல்கொய்தா நடவடிக்கைகள், அதன் தலைவர் ஒசாமா பின் லேடனுக்கு ஆதரவும் அடைக்கலமும் தந்தவர் இவர். செப்டம்பர் நியூயார்க் தாக்குதலுக்குப் பின் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் இவரைத் தேடிக் கொண்டிருக்கின்றன. ஒசாமா பின் லேடனுக்கு அடைக்கலம் கொடுத்த இவர் இப்போது பாகிஸ்தானில் மறைந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இப்போதும் ஆப்கனில் உள்ள நேட்டோ படைகள் மீதான தாக்குதல்களை நடத்துவது இவரது தலைமையிலான குழுதான் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இவரைப் பற்றி தகவல் கொடுத்தால் 10 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு காத்திருக்கிறது. மற்ற நாடுகளும் இதே போன்ற பரிசுகளை அறிவித்திருக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக