தீவிரவாதி கசாப் டெங்கு காய்ச்சலுக்கு பலியானதாகவும், அவனை தூக்கிலிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது வெறும் கண்துடைப்பு என்றும் தகவல் கள் வெளியாகி வருகின்றன.
26/11 தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை 7.30 மணிக்கு புனேவில் உள்ள ஏர்வாடா சிறையில் தூக்கிலிடப்பட்டான். அவனை தூக்கிலிடும் செய்தி பரம ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இதனால் இன்று காலை கசாப் தூக்கு செய்தி கேட்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
இந்நிலையில் கசாப் டெங்கு காய்ச்சலுக்கு பலியானதாகவும், அதை மறைத்து அவனை தூக்கிலிட்டுவிட்டதாக தெரிவிப்பது வெறும் கண்துடைப்பே என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த தகவல் உண்மை என்பது போல கசாபை தூக்கிலிட்ட கையோடு சிறைக்குள்ளேயே அவனது உடலை புதைத்துவிட்டனர்.
இது குறித்து மக்கள் டுவிட்டரில் கூறியிருப்பதைப் பார்ப்போம்,
1. கசாபுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக தகவல் வெளியாகியது. உடல் நலம் பாதிக்கப்பட்டவரை தூக்கிலிட இந்திய சட்டம் அனுமதிக்கிறதா?
2. கசாப் டெங்குவால் இறந்தானா? அரசின் அதிவேக நடவடிக்கை அதை மறைக்கத் தானா?
3. கசாப் டெங்குவால் இறந்திருக்கக்கூடும். ஆனால் அரசோ அவனைத் தூக்கிலிட்டதாகக் கூறுகிறது.
4. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கசாபுக்கு டெங்கு காய்ச்சல் வந்தது. கசாப் டெங்குவால் இறந்தானா அல்லது அரசு தூக்கிலிட்டதா?
கசாப் டெங்கு காய்ச்சலால் அவதிப்படுவதாக அண்மையில் ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால் அவனுக்கு சாதாரண காய்ச்சல் தான் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே கசாப் தூக்கிலிடப்பட்டிருந்தால் அவனது உடலை புகைப்படம் எடுத்து ஏன் வெளியிடவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக