ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

டக்ளஸிடமிருந்து நினைவுப்பரிசுபெற்ற தேசிய விடுதலைப் பாடல் பாடிய உன்னி கிருஸ்ணன்.



தமிழகத்தின் கர்நாடக இசைக்கலைஞரும் திரையிசை பின்னணிப்பாடகருமான உன்னி கிருஸ்ணன் அண்மையில் நல்லூர்திருவிழாவை முன்னிட்டு இந்தியத்துணைத் தூதரகத்தின் அதிகாரி மகாலிங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். யாழ்ப்பாணத்தில் நல்லூரில் கேணல் கிட்டு நினைவுப் பூங்கா முன்னர் அமைந்திருந்த இடத்தில் காணப்பட்ட பூங்காவின் எச்சங்கள் அழிக்கப்பட்டு உன்னி கிருஸ்ணனின் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டிருந்தது.

நிகழ்வினை இராணுவ துணைக்குழுத் தலைவரும் அமைச்சருமான  டக்ளஸ் தேவானந்தாவைப் பிரநிதித்துவப்படுத்தும் ஈபிடிபி நிர்வகிக்கும் யாழ்.மாநகர சபை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வின் போது முதன்மை விருந்தினராக கலந்துகொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா உரை நிகழ்த்தும் போது தேசிய விடுதலைப் போராட்டம் நடைபெற்ற காலப் பகுதி இருண்ட காலமாக விளங்கியதாகவும், தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் மக்களை தவறாக வழிநடத்தியதாகவும் உரை நிகழத்தினார். அதன் பின்னர் பாடகர் உன்னி கிருஸ்ணனுக்கு நினைவுப் பரிசிலும் வழங்கியிருந்தார்.
யாழ்ப்பாணத்தில் இதேபோன்று இந்தியத் துணைத்தூதரகம், யாழ்.மாநகர சபை ஏற்பாட்டில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கொள்வார் என்று நிகழ்வு ஒன்றிற்கான அறிவிப்பினை யாழ்.மாநகர சபை அறிவித்திருந்த போதிலும் தமிழக மக்களின் உணர்வினை மதித்து ஏ.ஆர்.ரகுமான் அந்த நிகழ்வினைப் புறக்கணித்திருந்தார்.
நல்லூர் ஆலய நிகழ்வினைக் காரணம் காட்டி இந்தியத் துணைத்தூதரகமும் ஈபிடிபியும் இணைந்து பாடகர் உண்ணிகிருஸ்ணனை யாழ்ப்பாணம் அழைத்து அவருக்கு அமைச்சர் டக்ளஸ் மூலம் நினைவுப்பரிசில்வழங்கியமை யாழ்.மக்கள் மத்தியில் கவலையைத் தோற்றுவித்திருக்கின்றது. தமிழீழ எழுச்சிப்பாடல்கள் பலவற்றிற்கு பின்னணிக்குரல் வழங்கிய உன்னி கிருஸ்ணன் திட்டமிட்டே ஈபிடிபி நிகழ்விற்கு அழைக்கப்பட்டிருப்பதாக யாழ்.மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக