ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

அழகான ஆண்கள் மீது அதிக மோகம் கொண்ட இரும்புப் பெண் மார்கரெட் தட்சர்!


இரும்புப் பெண் என்று அழைக்கப்பட்டவரான இங்கிலாந்து நாட்டு முன்னாள் பிரதமர் மார்கரெட் தட்சருக்கு அழகான ஆண்கள் என்றால் கொள்ளைப் பிரியமாம். அவர்களுக்கு ஏதாவது பதவி கொடுத்து தனக்குப் பக்கத்தில் வைத்துக் கொண்டு இரசிப்பாராம்.

இதுகுறித்த தகவலை தட்சரின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் லார்ட் வாடிங்டன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தட்சருக்கு அறிவெல்லாம் பிறகுதான். அழகுதான் அவரை ஈர்க்கும்.
அதிலும் அழகான ஆண்களைக் கண்டார் விட மாட்டார்.
அழகான, இளம் எம்.பிக்கள் என்றால் அவருக்குப் பிரியம். உடனே அமைச்சர் பதவி கொடுத்து அவர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொள்வார்.
அந்த அமைச்சருக்கு சுய புத்தி உள்ளதா, அறிவு உள்ளதா, செயல் திறன் உள்ளதா என்பதையெல்லாம் பார்க்க மாட்டார்.
அவர்களால் ஒரு பயனும் இல்லாவிட்டாலும் கூட அழகாக இருந்தால் போதும், பதவிதான். அமைச்சர்கள் நியமனம், அமைச்சரவை மாற்றத்தின்போது தட்சர் பார்க்கும் முதல் தகுதியே, அழகான முகம் இருக்கிறதா என்பது குறித்துத்தான். என்னதான் திறமையானவராக இருந்தாலும், அழகாக இல்லாவிட்டால் தட்சருக்குப் பிடிக்காது.
தன்னைச் சுற்றிலும் அழகான ஆண்கள் இருக்க வேண்டும் என்பதில் அவர் அதிகம் விருப்பம் கொண்டிருந்தார் என்று கூறியுள்ளார் வாடிங்டன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக