தமிழ்நாடு முழுவதும் 35 ஆயிரம் போலி டாக்டர்கள் உள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் மாநில தலைவர் பிரகாசம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார். சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நேற்று தொடர் மருத்துவக்கல்வியின் முதல்
கருத்தரங்க துவக்க விழாவுக்கு இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் தமிழக தலைவர் பிரகாசம் வந்திருந்தார். அப்போது அவர் Ôதினகரன்Õ நிருபரிடம் கூறியது: இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற மருத்துவ படிப்பை படித்து முடித்து, அதை சம்பந்தப்பட்ட மாநில கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். அப்போதுதான் ஒருவர் எம்.பி.பி.எஸ்., படித்திருந்தாலும் டாக்டராக அங்கீகாரம் பெறுவார். இந்த விதியை பின்பற்றாதவர்களை போலி டாக்டர்கள் பட்டியலில் வைக்கலாம். அதன்படி, தமிழகம் முழுவதும் தற்போது 35 ஆயிரம் போலி டாக்டர்கள் இருப்பது எங்களது ஆய்வில் தெரியவந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் மட்டுமே 1500க்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் உள்ளனர். விரைவில், போலி டாக்டர்கள் பட்டியலை வெளியிட நடவடிக்கை எடுத்து வருகிறோம். போலி டாக்டர்கள் குறித்து புகார் வந்தால் அவர்களை கைது செய்து, 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ20 ஆயிரம் அபராதமும் விதிக்கலாம் என கடந்த 2010ம் ஆண்டு, நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது. இதுகுறித்து தமிழக அரசும் விரைவில் சட்டம் கொண்டு வர வேண்டும். மத்திய அரசு மசோதாவில் போலி டாக்டர்களுக்கு அபராத தொகை சொற்ப அளவில் உள்ளதால், அதை 3 ஆண்டு சிறை தண்டனையுடன், ரூ5 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் புதிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு டாக்டர் பிரகாசம் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக