
ஆனால் சமீபத்திய ஆய்வில் உருளை கிழங்கு மனிதனின் ஆரோக்கியத்துக்கு பெரும் பங்கு வகிப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பொட்டாசியம் சத்து மனிதருக்கு ஒரு நாளைய சக்தியை அளிக்கிறது. இது எந்த காய்கறி, பழங்களிலும் அவ்வளவாக இல்லை. ஆனால் உருளை கிழங்கில் இந்த சத்து அதிகமாக உள்ளது.
எனவே, காய்கறி, பழங்களிலேயே உருளை கிழங்குதான் ராஜாஎன்கின்றனர். சமீப காலமாக உலகம் முழுவதும் ஏராளமானோர் பொட்டாசியம் சத்து குறைபாட்டால் அவதிப்படுவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு உருளை கிழங்கு இந்த குறைபாட்டை எளிதாக போக்கும் என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில ஒரு நாளைக்கு மனிதனுக்கு சுமார் 4700 மி.கி. பொட்டாசியம் சத்து தேவைப்படுகிறது. காய்கறிகள், பழங்களுடன் ஒப்பிடும் போது உருளையில் இந்த சத்து அதிக அளவு உள்ளது. டாக்டர்களின் அறிவுரைப்படி இதை உண்ணலாம்என்கின்றனர். அதை விட உருளை கிழங்கு சாப்பிடுவதால் பக்க விளைவோ பாதிப்போ இல்லை என்கின்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக