சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியில் இருந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஸ்டேட் வங்கியின் பிரதான கிளைகளுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 நாணயங்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி புறப்பட்டது.
இந்த கண்டெய்னரில் இருந்த ரூ.40 லட்சம் மதிப் பிலான நாணயங்கள் கோத்தகிரி, குன்னூர், ஊட்டி யில் உள்ள கிளைகளில் இறக்கப்பட்டன. பின்னர் ரூ. 10 லட்சம் மதிப்பிலான நாணயங்களை ஒரு டெம்போ டிராவலர் வேனில் ஏற்றிக் கொண்டு கூடலூரில் உள்ள ஸ்டேட் வங்கியின் கிளைக்கு புறப்பட்டனர்.
டிரைவர் ராமமூர்த்தி வேனை ஓட்டிச் சென்றார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த கருப்பு, சேகர் மற்றும் ஹரிகரன் ஆகியோரும் சென்றனர். வேன் கல்லட்டி மலைப்பாதையில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது.
இதில் வேனில் இருந்த ரூ. 10 லட்சம் மதிப்பிலான நாணயங்கள் நடுரோட்டில் சிதறின. இந்த விபத்தில் வேன் டிரைவர் ராமமூர்த்தி படுகாயமடைந்தார். அவர் உடனடியாய் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
நாணயம் ஏற்றி வந்த வேன் ரோட்டில் கவிழ்ந்ததை அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் நாணயங்களை பத்தரமாக மீட்டு வேனில் வந்தவர்களிடம் ஒப்படைத்தனர். நாணயம் ஏற்றி வந்த வேன் நடுரோட்டில் கவிழ்ந்த விவரம் அறிந்த போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் நாணயங்களை பத்திரமாக மீட்க உதவினார்கள்.
நாணயங்களை நாணயம் தவறாமல் சேகரித்து கொடுத்த பொது மக்களை அதிகாரிகள் பாராட்டினார்கள்.
நாணயம் மிக்க மக்கள்...
பதிலளிநீக்குஇதுவே ரூபாய் நோட்டா இருந்தா பொறுக்கிக் கொடுப்பாங்களா...# டவுட்டு....