ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

என் கணவரை அரசியலுக்கு வா வா என்று அழைக்கிறார்கள்: அவர் வர மாட்டார்





ரஜினிகாந்தை அரசியலுக்கு அழைக்காதீர்கள். அவர் வர மாட்டார் என லதா ரஜினிகாந்த் சென்னையில் (19.01.2012) நடந்த ஆஸ்ரம் கல்வி நி
றுவன விழாவில் பேசினார். இது ரஜினி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் கல்வி நிறுவனங்களின் ஆண்டு விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடந்தது.


விழாவை தொகுத்து வழங்கிய லதா ரஜினிகாந்த பேசும்போது,


என் கணவர் இந்திய அளவில் மிகச் சிறந்த தேசியவாதி. அவரை பலரும் அரசியலுக்கு வா வா என்று அழைக்கிறார்கள். அரசியலுக்கு 
வந்துதான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதில்லை. அதில் இல்லாமலும் சேவை செய்யலாம். எனவே தயவு செய்து அவரை இனிமேல் அரசியலுக்கு வரவேண்டும் என்று அழைக்காதீர்கள். அவர் வர மாட்டார்.

நான் இப்போது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்திய அளவில் ஒரு புது அமைப்பை தொடங்கியிருக்கிறேன். அதன் 
மூலம் மக்களுக்கு நிறைய பொதுச்சேவைகள் செய்ய திட்டமிட்டிருக்கிறேன். சில சமூக அமைப்புகளுடன் இணைந்து செயல்படவும் திட்டம் வகுத்துள்ளேன் என்றார்.

விழாவில் லதா ரஜினிகாந்தின் பேச்சு, ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக