தங்கபாலுதேர்தல் வந்தாலே சுவாரசியமான காட்சிகளுக்குப் பஞ்சமில்லாத காங்கிரஸ் கட்சி, திருமங்கலத்தில் தமது முதல் நாள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது. தங்கத் தலைவர், தமிழகத்தின் விடிவள்ளி தங்கபாலு அவர்களுடன், முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவனும் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்தது வித்தியாசமான காட்சி.
ஆனால், அதைக் கண்குளிர பார்க்கத்தான் காங்கிரஸ் தொண்டர்களுக்கு கொடுத்து வைக்கவில்லை.
என்ன காரணம்? தொண்டர்கள் வருவதற்குமுன் இவர்கள் பிரச்சாரம் செய்து முடித்து விட்டார்களா? அல்லது, பிரச்சாரம் தொடங்கு முன்னே இவர்கள் தமக்குள் (வழமைபோல) அடித்துக் கொண்டார்களா?
இரண்டுமே இல்லை. முதல்நாள் பிரச்சாரத்துக்கு, தொண்டர்களே வரவில்லை. அவர்கள் வராமல், இவர்களுக்கு டிமிக்கி கொடுத்து விட்டார்கள்!
தமிழக காங்கிரஸ் கட்சியின் 4 நம்பிக்கை நட்சத்திரங்களில், 2 ந.ந.கள் நேரில் வந்தும் (மிகுதி இருவரும் டில்லியில்), தொண்டர்கள் திரளாத காரணம் என்ன? விசாரித்துப் பார்த்ததில் அதெல்லாம் ஒன்றும் கொள்கை முரண்பாடு இல்லை என்று தெரியவந்தது.
தொண்டர்கள் வராத காரணம், செய்தித் தலைப்பில் உள்ள அதே காரணம்தான் - “யோவ் தலைவா.. குவாட்டர் எங்கே? பிரியாணி எங்கே?”
சென்னை மாநகராட்சியில் காங்கிரஸ் சார்பில் மேயருக்கு போட்டியிடும் சைதை ரவி பற்றியே தொண்டர்கள் குமுறுகின்றனர். “அவரை யார் வேட்பாளராக நிறுத்தினார்கள்? அந்த ஆள் வாயைத் திறக்கிறாரே தவிர, பணப் பையைத் திறக்கிறார் இல்லை” என்பது அவர்களது புலம்பல். “மேலிடத்தில் இருந்து பைசா வந்து சேரவில்லை” என்பது சைதை ரவியின் சமாளிப்பு.
காங்கிரஸ் வேட்பாளர் சைதை ரவி, முன்பு மாநகராட்சியின் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்தவர். காங்கிரஸிலுள்ள முப்பத்து முக்கோடி கோஷ்டிகளில், மத்திய அமைச்சர் வாசனின் ஆதரவாளர். இரண்டு முறை கவுன்சிலர், ஒரு முறை மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் என்று புகுந்து விளையாடியவர்.
தி.மு.க., ஆட்சியில் மேயராக இருந்த மா.சுப்பிரமணியமும் இவரும், “நண்பேன்டா” நெருக்கத்தில் இருந்ததால், மாநகராட்சி கன்ட்ராக்ட்களில் ‘ஒரு கை’ பார்த்தவர் என்கிறார்கள்!
“பதவியில் சம்பாதித்ததில் கொஞ்சமாவது செலவு செய்யாவிட்டால் எப்படி?” என்று கிடுக்கிப்பிடி போடுகிறார்கள் தொண்டர்கள்.
ஆனால் இவரோ, பணம் கேட்கச் சென்ற தொண்டர்களுக்கு ஆளுக்கு ஒரு கதர் துண்டைக் கையில் கொடுத்து, “வந்தே மாதரம்” என்று சொல்லி அனுப்பி விட்டதில், ரெடராக நிற்கின்றார்கள் சென்னை தொண்டர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக