ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

அமெரிக்க அரச அங்கிகாரம் பெற்ற குடியுரிமை பெற விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது


images (30)வருடாவருடம் அமெரிக்காவில் குடியுரிமை பெறுவதற்கான சந்தர்ப்பத்தை கிறீன் கார்டின் (Diversity Immigrant Visa Lottery Programm) மூலம் உலகெங்கிலும் இருந்து பலர் பெற்று வருகிறார்கள்.
அந்த வகையில் இம்முறையும் 55.000 பேருக்கு அவர்களது தகமைகள் அடிப்படையில் இந்த விசா கிடைக்க இருக்கிறது.
2011 அக்டோபர்4யிலிருந்து இதற்கான விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான விபரங்களை www. Dvottery.gov என்ற தளத்திலும் மும் மொழிகளிலும் அறிய விரும்பின்  ty-visa-lottery-program.html என்ற தளத்திலும் அறியாலாம்.

இதை நீங்கள் 2011 நவம்பர் 5 வரைக்கள் மேற்கொள்ள வேண்டும். உங்கள் விண்ணப்ப விபரத்தை 2012 மே 1 ம் திகதியிலிருந்து www.dvlottery.state.gov என்ற தளத்தில் அறிந்து கொள்ள முடியும்.
இந்த நடை முறை அமெரிக்க அரசாங்கத்தின் நேரடி நடைமுறைப்படுத்தலில் தான் நடை பெறுவதால் இடைத் தரகர் யாருமே அரசாங்கத்தால் அமர்த்தப்படவில்லை. அதனால் இடைத் தரகர்கள் யாரிடமும் ஏமார வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக