ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

புலிகளை ஒழித்துவிட்டோம்! இனித் தீர்வு தேவையில்லை! கோத்தபாய ராஜபக்ஷ திட்டவட்டமாகத் தெரிவிப்பு

இலங்கையில் விடுதலைப்புலிகளை அடியோடு ஒழித்துவிட்டதால் இனியும் தீர்வு, அதிகாரப் பகிர்வு அது இது என்று பேசிக் கொண்டிருக்கத் தேவையில்லை. இவ்வாறு பாதுகாப்புச் செயலரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தம்பியுமான கோத்தபாய ராஜபக்ஷ திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

எம்மிடம் அரசமைப்பு ஒன்று இருக்கிறது. அதில் மேலும் திருத்தங்கள் செய்ய வேண்டி இருந்தால் அரசால் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் பேச முடியும். ஏனெனில் வடக்கு கிழக்கில் இப்போது நாடாளுமன்றப் பிரதிநிதிகள் இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் ஹெட்லைன்ஸ் ருடே ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்தத் தொலைக்காட்சியே இந்தியாவில் சிறிலங்காவின் கொலைக்களம் என்ற ஆவணப்படத்தை ஒளிபரப்பியது. இதனால் இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழகத்தில் மட்டுமன்றி மற்றைய மாநிலங்களிலும் கவனத்தை ஈர்த்தது.
சிறிலங்காவின் கொலைக்களம் ஆவணப் படத்தை இரு தடவைகள் ஒளிபரப்பியதைத் தொடர்ந்து ஹெட்லைன்ஸ் ருடே கோத்தபாயவின் பேட்டியையும் இப்போது ஒளிபரப்பியுள்ளது.
அந்தப் பேட்டியில் தமிழர்களுடனான நல்லிணக்க முயற்சியில், புலம்பெயர் தமிழர்களையும் இணைத்துக் கொள்ளலாமே என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்தபோதே கோத்தபாய, தீர்வு என்று இனியும் பேசிக் கொண்டிருக்கத் தேவையில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அந்தப் பேட்டியில் அவர் தெரிவித்த சில முக்கிய விவரங்கள் வருமாறு:
அனைத்துலக விசாரணை
இறுதிப் போரின் போது நடந்தவைகள் குறித்து அனைத்துலக விசாரணை ஒன்று வேண்டும் என்று கேட்பது எமது ஆளுமையைக் குறைத்து மதிப்பிடுவதாக அமைகிறது.
இலங்கை இறைமையுள்ள ஒரு நாடு. பிரிட்டிஷார் விட்டுச் சென்ற சிறந்த நீதித்துறை எம்மிடம் இருக்கிறது. மிகப் பெரிய பயங்கரவாதிகளை நாம் தோற்கடித்திருக்கிறோம். ஆனால் இதனைச் செய்ய முடியாமல் பல நாடுகள் திண்டாடி வருகின்றன. அப்படியிருக்கையில் அனைத்துலக விசாரணையைக் கோருபவர்கள் எம்மை நம்ப வேண்டும்.
ஒரு இறைமையுள்ள நாட்டுக்குள் எப்படி அனைத்துலக விசாரணை ஒன்றை முன்னெடுக்க முடியும்? அது நியாயமற்றது. அப்படி விசாரணை கோருபவர்களை சர்வதேச சமூகம் என்று குறிப்பிடுவது தவறான விபரிப்பு. சர்வதேச சமூகத்தில் உள்ள ஒரு சில நாடுகள் இதனைச் செய்யக் கூடும்.
ஆனால் மீதி மொத்த உலகமும் எங்களை ஆதரிக்கிறது. ரஷ்யாவில் ஆரம்பித்து சீனா வரைக்கும், நிச்சயமாக இந்தியாவும் எங்களை ஆதரிக்கிறது, பாகிஸ்தான், அரபு நாடுகள், ஆபிரிக்க நாடுகள் என்று அனைத்தும் எங்களை ஆதரிக்கின்றன. இவைதான் சர்வதேச சமூகம். ஒரு சிலர் மட்டும் தங்களை சர்வதேச சமூகம் என்று கூறிக்கொள்ள முடியாது. அத்தகைய ஒரு அனைத்துலக விசாரணையை இந்தியா தனது நாட்டுக்குள் அனுமதிக்கும் என்று நான் நினைக்கவில்லை. எந்த ஒரு இறைமையுள்ள நாடும் அப்படி அனுமதிக்காது.
போரில் எந்த ஒரு பொதுமகனும் கொல்லப்படவில்லை என்று நான் சொல்லமாட்டேன். ஆனால் அந்த எண்ணிக்கை மிகச் சிறியது என்று என்னால் சொல்ல முடியும். பெரும் படுகொலை என்று அதனை வகைப்படுத்த முடியாது. என்னுடைய வாதம் எல்லாம், ஏன் எந்த ஒரு அனைத்துலக நிறுவனமும் ஏன் ஒரு இறைமையுள்ள அரசைச் சந்தேகிக்க வேண்டும் என்பதுதான்.
தமிழகத் தீர்மானம்
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும் என்று ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியது அவரது அரசியல் செல்வாக்கை வளர்த்துக் கொள்வதற்காக.
உண்மையில் ஈழத் தமிழர்கள் மீது அவருக்கு அக்கறை இருந்தால் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடலுக்குள் வந்து மீன்பிடிப்பதை அவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும். அதனால் பாதிக்கப்படுபவர்கள் இலங்கைத் தமிழ் மீனவர்களே.
அப்படிப்பட்ட விடயங்கள் வரும்போது அவர்கள் மௌனமாகிவிடுவார்கள். அப்போது இலங்கைத் தமிழர்களின் நலன்கள் குறித்து அவர்கள் பேசமாட்டார்கள். ஜெயலலிதாவுக்கு உண்மையான நிலைவரத்தைப் புரிய வைக்க முயன்றிருக்கிறோம். அதற்காகவே அவருடன் இராஜதந்திர மட்டத்தில் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டன.
மீண்டும் போராட்டம்
அரசியல் தீர்வு தாமதிக்கப்படுவதால் மீண்டும் ஒரு ஆயுத வன்முறை தோன்றக்கூடுமா?
அரசியல் தீர்வு பற்றிப் பேசுவது பொருத்தமற்றது. ஏனெனில் இந்தியாவின் போதனையுடன் 13வது திருத்தம் கொண்டு வரப்பட்டது. அப்போது அது பற்றிப் புலிகளுடன் பேசப்பட்டது. அந்தத் திருத்தச் சட்ட மூலம் வரையப்பட்ட போது இலங்கை அரசுக்கு அதில் எந்தப் பங்கும் இருக்கவில்லை. ஆனால் பாதுகாப்பு என்று வந்தபோது நாங்கள் எந்தச் சந்தர்ப்பத்தையும் வழங்கத் தயாராக இருக்கவில்லை.
இப்போதும் அதுதான் எனது பொறுப்பு. நானும் எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் வழங்கப் போவதில்லை. பாதுகாப்பு விடயத்தில் எந்தவொரு தளர்வையும் நான் அனுமதிக்க மாட்டேன். ஏனெனில் அதனை நாம் செய்ய முடியாது. நாங்கள் தொடர்ந்தும் எமது பாதுகாப்புக் கட்டமைப்புக்களை மேம்படுத்திக் கொண்டே செல்வோம்.
அங்கே சண்டையிடுவதற்கு ஆயுதம் தாங்கிய விடுதலைப் புலிகள் இல்லை என்ற போதும், புலனாய்வுப் பணிகள் கண்காணிப்பு நடவடிக்கைகள், ஆயுதங்கள் இலங்கைக்குள் எடுத்து வரப்படுவதைத் தடுப்பதற்கான பணிகள், கரையோரப் பாதுகாப்பு போன்ற பல விடயங்கள் இருப்பதால் பாதுகாப்பை நாம் ஒருபோதும் தளர்த்த மாட்டோம்.
அரசியல் தீர்வு
இரு இனங்களும் இணைந்து வாழ்வதற்கு தற்போது இருக்கும் அரசமைப்பே போதுமானது. அதில் எந்தப் பிரச்சினைகளும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. கலந்துரையாடல்கள் மூலம் இதைத்தான் தீர்வாக மக்களிடம் கொடுக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.
அதாவது இப்போது புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டாயிற்று. அதனால் இப்போதிருப்பதைவிட மேலான ஒன்றைச் செய்வதற்கான தேவை இருப்பதாக நான் கருதவில்லை. இந்த அரசமைப்பு அதிகாரங்களை அடிமட்டம் வரைக்கும் வழங்குகிறது.
இப்போதுகூட உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தி இருக்கிறோம். விரைவில் மாகாண சபைத் தேர்தலையும் ஜனாதிபதி நடத்த இருக்கிறார்.
எனவே அதிகாரப் பகிர்வு என்ற ரீதியில் நாங்கள் போதியளவுக்கு ஏற்கனவே வழங்கி விட்டோம் என்றே நான் நினைக்கிறேன். அதைவிட மேலதிகமாக ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.
உதயன் மீதான தாக்குதல்
உதயன் செய்தி ஆசிரியர் தாக்கப்பட்டமை ஒரு சின்ன விடயம். இலங்கையில் நாளாந்தம் நடக்கும் தாக்குதல்களுடன் ஒப்பிடும்போது இது ஒன்றும் பெரிய விடயமே இல்லை. இது சாதாரணமானது. மற்றைய நாடுகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுவாக நடக்கின்றன.
ஆனால் இராணுவச் வாடிக்கு மிக அருகில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதே?
இப்படி இலகுவாகச் சொல்லிவிட முடியும். அப்படியானால் நான் உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். கிளிநொச்சியில் ஒரு பொலிஸ்காரர் கொல்லப்பட்டார். அவரது உடல் சோதனைச் சாவடியில் இருந்து 25 மீற்றர் தூரத்தில் கண்டெடுக்கப்பட்டது. மக்கள் என்ன நினைத்தார்கள் யாரோ அவரை அடித்துக் கொன்றுவிட்டார்கள் என்று. ஆனால், உண்மை என்னவென்றால் அவர் நடந்து சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த வாகனம் ஒன்று அவரை மோதித் தள்ளிவிட்டுப் போய்விட்டது என்பதுதான்.
ஆனால் காயங்களைப் பார்க்கும் போது அவர் தாக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரிகின்றனவே?
அப்படி நடந்திருக்கலாம். அதுபற்றி நிச்சயம் பொலிஸ் விசாரிக்கும். அதற்காக ஏன் அரசையும் பாதுகாப்புப் படையினரையும் எல்லோரும் கண்டிக்க வேண்டும். தேர்தலுக்கு முன்னர் இப்படி ஏதாவது நடைபெற்றிருந்தால் அதில் என்னவாவது அர்த்தம் இருந்திருக்கக்கூடும். ஆனால் தேர்தலுக்குப் பின்னர் இப்படிப்பட்ட சம்பவங்கள் எங்கு வேண்டுமானாலும் நடக்கக்கூடும்.
கேணல் ரமேஷ்
விடுதலைப்புலிகளின் தளபதி கேணல் ரமேஷ் ஒருபோதும் இராணுவத்தின் காவலில் இருக்கவில்லை. அவர் ஒரு பயங்கரவாதி. அது சனல்4 தயாரித்த ஆவணப்படத்தில் காட்டப்படவில்லை. நான் அவரைப் பற்றிப் பேச விருப்பப்படவில்லை. அவரைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்.
ஆனாலும் அவர்… எதைப் பற்றியும் எனக்குக் கவலையில்லை. அவர் ஒரு கொலைகாரர் மட்டுமே.
ஆனால் உங்களுடைய அரசமைப்புப்படியே நீதியை நாடும் உரிமை அவருக்கு இருந்திருக்கிறதே?
அப்படி அவர் அங்கே இருந்திருந்தால் சரணடைந்த எல்லோருக்கும் வழங்கிய சந்தர்ப்பத்தை அவருக்கும் வழங்கி இருப்போம்.
அவர் இராணுவக் காவலில் இருந்தாரா?
அவர் ஒருபோதும் இராணுவத்தினரின் காவலில் இருக்கவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக