ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

தங்கம் இறக்குமதி மூலம் அரசுக்கு வரிவருவாய் இரட்டிப்பு – பிரணாப் முகர்ஜி



தங்கம் இறக்குமதி மூலம் அரசுக்கு வரிவருவாய் இரட்டிப்பு – பிரணாப் முகர்ஜி தங்கத்தின் விலை உயர்வால் நடுத்தர மக்கள் கலக்கத்தில் ஆழந்துள்ள நிலையில், மத்திய அரசு மகிழ்ச்சியில் இருக்கிறது. தங்கம் இறக்குமதியால் கிடைக்கும் வரிவருவாய் இரட்டிப்பாகி உள்ளதே காரணம்.
மக்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த நிதியமைச்சர் அமைச்சர் பிரணாப் முகர்ஜி
தங்கத்திற்கு ஏற்பட்டுள்ள  தேவையால்  அதிகரித்து வரும்  இறக்குமதியின் காரணமாக, இறக்குமதித் வரி  மூலம் இந்திய அரசுக்கு கிடைத்து வரும் வருவாய் கிட்டத்தட்டஇரட்டிப்பாகியுள்ளது என்றார்.
2009-10ஆம் ஆண்டில் தங்கம் இறக்குமதியின் மீது விதிக்கப்பட்ட சுங்கத் வரியால் ரூ.1,567.64 கோடி வருவாய் கிடைத்தது என்றும், 2010-11ஆம் ஆண்டில் இது ரூ.2,553.52 கோடியாக அதிகரித்துள்ளது என்றும் கூறினார்.
உலகத் தங்கம்அமைப்பின்  மதிப்பீட்டின் படி, சீனாவிற்குப் பிறகு இந்தியாவே அதிகமாக தங்கம் இறக்குமதி செய்வதாகவும்  2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்த விலையை விட, தங்கத்தின் விலை 78.11 விழுக்காடு உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை இதே காலகட்டத்தில் 152.79 விழுக்காடு உயர்ந்துள்ளது. அதே போல், 2008 ஏப்ரல் 1ஆம் தேதி 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.11,656 ஆக இருந்தது.
2011 மார்ச் 31ஆம் தேதி ரூ.20,760 ஆக உயர்ந்துள்ளது என்றும்  தெரிவித்தார்.
டீசல் இரட்டை விலை பற்றி விளக்கம்
டீசலுக்கு இரட்டை விலையை அறிமுகப்படுத்தும் எண்ணம் தற்‌போதைக்கு இல்லை என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த நிலையிலும், தங்களால் அதை கட்டுக்குள் வைக்க முடிந்ததாகவும், வளர்ச்சி விகிதம் சீரான அளவில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக