ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ஒவ்வொரு ஆண்டிலும் 5 லட்சம் பேரை இழந்து வரும் கிறிஸ்தவ மதம். 2030 ஆண்டு இங்கிலாந்து ஒரு கிறித்துவ நாடாக இருக்காது. அதேவளை முஸ்லிம்களின் எண்ணிக்கை கடும் உயர்வு.

2030இல் இங்கிலாந்து நாடு ஒரு கிறித்துவ நாடாக இருக்காது
மதநம்பிக்கை அற்றவர்கள் கிறித்துவர்களை விட அப்போது அதிக எண்ணிக்கையினராக ஆகிவிடுவார்கள் என்று ஓர் அறிக்கை தெரிவிக்கிறது.

ஒவ்வொரு ஆண்டிலும் 5 லட்சம் நம்பிக்கையாளர்களை கிறித்துவ மதம் இழந்து வருகிறது. ஆண்டுக்கு 750,000 அளவுக்கு இறைநம்பிக்கை அற்றவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது என்று டெய்லி மெயில் என்ற பத்திரிக்கை தெரிவிக்கிறது.
கிறித்துவ மதத்தவரின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மற்ற மதத்தவரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று (காமன்ஸ்) நூலக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
முஸ்லிம்களின் எண்ணிக்கை கடந்த ஆறு ஆண்டுகளில் 39 விகிதம் உயர்ந்து 30 லட்சத்தை எட்டியுள்ளது. இந்துக்களும், புத்தர்களும் தலா 24, 26 விகிதமாக உயர்ந்துள்ளனர்.
சீக்கியர்களும், யூதர்களும் சிறிதளவு குறைந்துள்ளனர் என்று மெயில் தெரிவிக்கிறது. கடந்த வாரத்தில் நாடாளுமன்ற கிறித்துவ உறுப்பினர்கள் குழு ஒன்று, கிறித்துவர்களுக்கு எதிராக ஏற்றுக் கொள்ள இயலாத பாகுபாடு வளர்ந்து வருவதாகக் கூறியுள்ளது.
இறைநம்பிக்கையாளர்கள் மீது மதச்சார்பற்ற எதிர்ப்பு உணர்வு கொண்ட அரசு அடக்கு முறையை மேற்கொள்வதாக, டோரி கட்சியைச் சேர்ந்த முன்னாள் நீதித்துறை அமைச்சர் கேரி ஸ்டிரீட்டர் கூறுகிறார்.
கடந்த ஆறு ஆண்டுகளில் 7.6 விகிதமாக கிறித்துவர்களின் எண்ணிக்கை குறைந்து 2010ல் 4. 11 கோடி கிறித்தவர்கள் மட்டுமே இருப்பதை நான் கண்டேன். அதே கால கட்டத்தில் இறைநம்பிக்கையற்றவர்கள் எண்ணிக்கை 49 விகிதம் உயர்ந்து 1.34 கோடி மக்கள் இருக்கின்றனர் என்று அவர் கூறுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக