ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி.ராஜேந்தர், சிம்பு மீது கமிஷனரிடம் புகார்


சென்னை : டைரக்டர் டி.ராஜேந்தர் மற்றும் அவரது மகன் நடிகர் சிலம்பரசன் ஆகியோர் தர வேண்டிய பணத்தை திரும்ப கேட்டால் மிரட்டல் விடுக்கின்றனர் என்று திருச்சியைச் சேர்ந்த திரைப்பட விநியோகஸ்தர் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து, திருச்சியைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் அளித்தார். அதில், கூறியிருப்பதாவது:


திரைப்பட விநியோகஸ்தர் மற்றும் திரைத்துரையினருக்கு கடனுக்கு பணம் கொடுத்து வருகிறேன். கடந்த 1998&99ம் ஆண்டு டி.ராஜேந்தருக்கு குறைந்தபட்ச உறுதி என்கிற ஒப்பந்த அடிப்படையில் அவரது மோனிசா என் மோனலிசா என்ற படத்திற்கு ரூ.59 லட்சம் பணம் கொடுத்தேன். அப்படத்தின் திரையரங்க வசூல் மூலம் ரூ.25 லட்சம் மட்டுமே கிடைத்தது. திரையரங்க உரிமையாளர்களின் வற்புறுத்தலால் மேலும், ரூ.3 லட்சம் கொடுத்தார்.

மீதிப்பணமான ரூ.31 லட்சம் பணமும் எனக்கு சேர வேண்டிய 15 சதவீத தொகையையும் கொடுக்கவில்லை. இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், பணத்தை திரும்ப தருவதாக டி.ராஜேந்தர் உறுதி அளித்தார். டி.ராஜேந்தர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அவரது மகன் சிலம்பரசன் என்கிற சிம்பு என்னை மிரட்டினார்.

டி.ராஜேந்தர் என்னை காலி செய்து விடுவதாக எச்சரித்தார். இந்நிலையில் கடந்த 3ம் தேதி டி.ராஜேந்தர் வீட்டிற்கு சென்று அவரையும், சிலம்பரசனையும் பார்த்தேன். இருவரும் என்னை மிரட்டினர். சிலம்பரசன் என்னை உயிரோடு எரித்து கொலை செய்து விடுவேன் என்று எச்சரித்தார். முகத்தில் அறைந்து வீட்டை விட்டு வெளியே தள்ளினார். பணத்தையும் தர மறுக்கின்றனர். இதனால் இவர்களால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது. சமரசம் பேச வீட்டிற்கு அழைத்து டி.ராஜேந்தரும், சிலம்பரசனும் என்னை மிரட்டினார்கள். எனவே, இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக