ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

சிக்கலில் முகேஷ் அம்பானியின் கனவு இல்லம்



இந்தியாவின் No1 பணக்காரர் முகேஷ் அம்பானியின் கனவு இல்லம் பறிபோகும் நிலையில் உள்ளது! உலகின் தலைசிறந்த கட்டிட அமைப்புக்களில் ஒன்றான இது கட்டப்பட்ட சில நாட்களிலேயே கதிகலங்கி நிற்கிறது, இக்கட்டிடம் சட்டவிரோதமான நிலத்தில் கட்டப்பட்டதுதான் காரணம்!

27 மாடிகளைக்கொண்ட £615 மில்லியன் மதிப்புள்ள இக்கட்டிடம் மும்பையின் முஸ்லிம் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டது சட்டவிரோதமானதென மகாராஷ்ரா மாநில அமைச்சர் தெரிவிக்கிறார்,
2002 ஆம் ஆண்டு இதன் கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோது எந்த வித எதிர்ப்பும் எழாத நிலையில் , முழுமையாக நிறைவடைந்தபின் இதுபோன்ற சர்ச்சைகள் வருவது தமக்கு சந்தேகத்தை எழுப்புவதாக அம்பானியின் வழக்கறிஞர் தெரிவித்தார்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக