மத்திய பிரதேச மாநிலம் பெட்டுல் பகுதியில் இருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது பதார் மருத்துவமனை. இது மிஷனரிகள் நடத்தும் மருத்துவ மனை. இங்கு பிரசவத்துக்காக மாயா என்ற இளம்பெண் சேர்ந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. ஆனால், குழந்தைகளின் மார்பு, வயிறு பகுதிகள் ஒட்டியிருந்தன. அதனால் மாயாவும் அவரது கணவர் ஹரிராமும் அதிர்ச்சி அடைந்தனர். எனினும், ஒட்டி பிறந்த பெண்கள் குழந்தைகள் மிகவும் நலமாக இருக்கின்றன. உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
அந்த குழந்தைகளின் பெற்றோர் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள். குழந்தைகளை தனித்தனியாக பிரிக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதற்கு பல லட்ச ரூபாய் செலவு செய்ய வசதி இல்லை என்ற ஏழை தம்பதி தெரிவித்தனர். குழந்தைக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க மருத்துவமனையே முன்வந்தது. எனினும், மருத்துவமனைக்கே அந்த குழந்தைகளை அன்பளிப்பாக ஹரிராமும் மாயாவும் கொடுத்துவிட்டனர்.
குழந்தைகளை மருத்துவமனைக்கு அன்பளிப்பாக தருவதாக, ஐம்பது ரூபாய் முத்திரைத் தாளில் ஹரிராமும் மாயாவும் கடிதம் எழுதி கொடுத்தனர். குழந்தைகளையும் அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர். இதனால் மருத்துவமனை டாக்டர்கள், ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தலைமறைவான தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து சட்ட நிபுணர்கள் கூறுகையில், ‘‘50 ரூபாய் முத்திரைத் தாளில் கடிதம் எழுதி குழந்தைகளை விட்டுவிட்டு சென்றது சட்டவிரோதம்’’ என்று கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக