சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள 108 அவசர ஆம்புலன்சு சேவைக்கு போன் செய்த ஒரு சிறுவன் தி.மு.க. தலைவர் கருணாநிதி வீட்டுக்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறிவிட்டு போனை வைத்து விட்டான்.
செல்போனில் பேசிய அந்த சிறுவன் யார்? என்று தெரியாததால் உடனடியாக போலீசுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் செல்போன் நம்பரை வைத்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் கடந்த 25-ந் தேதி சென்னை நகர் முழுவதும் வெடிகுண்டு வைக்கப் போவதாக கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுத்த பழைய வண்ணாரப்பேட்டை சலீம் மகன் யூசுப் என்ற சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் கடந்த 14-ந் தேதி எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெங்களூரை சேர்ந்த ஹரிஷா என்ற சிறுவனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
யாராவது குறும்புத்தனமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ மிரட்டல் விடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளதால் பெற்றோர்களும் பாதுகாவலர்களும் தங்கள் பொறுப்பில் உள்ள சிறுவர்களை உரிய பொறுப்புடன் கண்காணித்து அறிவுரை வழங்க வேண்டும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக