ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

எடியூரப்பாவை பதவி விலகச் சொன்னது பாஜக


கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக விலகுமாறு எடியூரப்பாவுக்கு பாஜக மேலிடம் உத்தரவிட்டுள்ளது  : கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக விலகுமாறு எடியூரப்பாவுக்கு பாஜக மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து எடியூரப்பா தமது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
சட்டவிரோத சுரங்கத் தொழில் தொடர்பான லோக் அயுக்தா அறிக்கை நேற்று அம்மாநில அரசிடம்
சமர்ப்பிக்கப்பட்டது. இதில் , எடியூரப்பா குடும்பத்தினருக்கு சொந்தமான அறக்கட்டளைக்கு 30 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், மேலும் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ரெட்டி சகோதரர்கள், எதிர்க்கட்சித் தலைவர் குமாரசாமி, மற்றும் 787 அரசு உயரதிகாரிகள் உட்பட பலர் மீதும் அந்த அறிக்கையில் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து டெல்லியில் நேற்று பாஜக மூத்ததலைவர் அத்வானியின் வீட்டில் அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் கூடி லோக் அயுக்தா அறிக்கை குறித்து விவாதித்தனர்.
அதில், கட்சியின் தலைவர் நிதின் கட்காரி, நாடாளுமன்ற கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்ரவராஜ் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தின் பின்னர், உடனடியாக டெல்லி வருமாறு எடியூரப்பா உள்ளிட்ட 6 பேருக்கும் கட்சி மேலிடம் அழைப்பு விடுத்தது.
இதனைத் தொடர்ந்து நேற்று இரவு எடியூரப்பா உள்ளிட்ட 6 பேரும் டெல்லிக்கு சென்றனர்.
இந்நிலையில், லோக் அயுக்தா அறிக்கை குறித்து விவாதிக்க பாஜக வின் உயர்மட்டக் குழு  டெல்லியில் இன்று கட்சியின் தலைவர் நிதின்கட்காரி வீட்டில் கூடியது. இதில் அத்வானி, நிதின் கட்காரி, சுஷ்மாஸ்வராஜ், அருண்ஜட்லி, வெங்கையா நாயுடு உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். இதில் எடியூரப்பாவைப் பதவி விலகுமாறு வலியுறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்த எடியூரப்பா, உடனடியாக பெங்களூரு திரும்பினார்.
இதனிடையே, கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக விலகுமாறு கட்சி மேலிடம் அவருக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலிட உத்தரவு குறித்து எடியூரப்பா தமது ஆதரவாளர்களுடன் பெங்களூருவில் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க கூடாது என பாஜ எம்.எல்.ஏக்களுக்கு கட்சி மேலிடம் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக