ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

கொலை வெறியாக மாறிய கோபம்!



tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபெற்ற குழந்தை இறந்துபோனால் வருத்தம் இருக்கத்தான் செய்யும். ஆனால், அதற்கு அம்மா கொடுத்த சாபம்தான் என நினைத்திருக்கிறார் ஒருவர். வருத்தம், கோபமாக மாற, தாயை அடித்தே கொன்றுவிட்டார். குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே ஒற்றையால்குடி பகுதியை சேர்ந்தவர்
மரியம்மாள். இவரது மகன் வினோ ஆனந்த். இவரது மனைவிக்கும், மரியம்மாளுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மனைவி கர்ப்பிணியாக இருக்கும் போது ‘உன் வயிற்றில் கரு தங்காது’ என்றெல்லாம் மரியம்மாள் சண்டையின்போது பேசியதாக தெரிகிறது.

இந்நிலையில் வினோ ஆனந்த் மனைவிக்கு கடந்த வாரம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் உடல் நிலை திடீரென மோசமாகி இறந்தது. குழந்தை இறந்ததற்கு தனது தாயின் சாபமே காரணம் என மகன் ஆத்திரமடைந்தார். வீட்டிலிருந்த தாயை வினோ ஆனந்த் சரமாரியாக தாக்கினார். இதில் மயங்கிய அவரை தர, தரவென இழுத்து ரோட்டுக்கு கொண்டு வந்தார். சிறிது நேரத்தில் மரியம்மாள் இறந்து விட்டார்.போலீசார் விரைந்து வந்து, வெறி பிடித்தவர் போல் தனது தாயின் உடல் அருகில் அமர்ந்து இருந்த வினோ ஆனந்த்தை பிடித்து விசாரித்தனர்.

அப்போது தனது தாயை கையாலும், காலாலும் அடித்து உதைத்து கொன்று விட்டதாக கூறினார். அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வினோ ஆனந்த் ஏற்கனவே மனநிலை பாதிக்கப்பட்டுதான் சிங்கப்பூரில் இருந்து ஊருக்கு வந்தார். குழந்தை இறந்தது மீண்டும் அவரை வெகுவாக பாதித்துள்ளது.  தாய் திட்டியதால் தான் குழந்தை இறந்து விட்டது என நினைத்து கொலை செய்து விட்டதாக அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர்.

மாமியார், மருமகள் சண்டையில் சாபம் கொடுப்பது சாதாரண விஷயம். அது இல்லாமல் சண்டை போட முடியாது. அப்படி சண்டையின் போது பேசிய விஷயத்தை பெரிதாக நினைத்து அதனால்தான் தன் குழந்தை இறந்து விட்டதாக நினைத்திருக்கிறார் மகன். சோகத்தில் கண்டதையும் நினைத்து குழம்பியிருக்கிறார். ஏதோ கோபத்தில் சொன்ன வார்த்தை, விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. குழந்தையை பறிகொடுத்த சோகம், கண்மண் தெரியாத கோபமாக மாறியிருக்கிறது. அந்தக் கோபத்தில் என்ன செய்கிறோம் எனத் தெரியாமல் பெற்ற தாயை அடித்துக் கொன்று விட்டார்.



For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |  
0
 
0
 
0
New
Share
  |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க
முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!
உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக