போரூர் சிக்னல் அருகே போக்குவரத்து நெரிசல் மிக அதிகம். இப் பிரச்சனையை போக்க அந்த பகுதியில் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு, ரூ.34 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பாலம் கட்டுவதற்கு இடம் தேவைப்படுவதால் அங்குள்ள கடைகளை அகற்ற உத்தரவிடப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நஷ்டஈடு வழங்கியது. கடைகளை உடனடியாக அகற்ற உத்தரவிடப்பட்டும் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் கடைகளை காலி செய்யவில்லை.
இந்நிலையில் மேம்பாலம் கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் ஆரம்பித்துவிட்டன. இன்று காலை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தலைமையில் 100க்கு அதிகமான ஊழியர்கள் வந்தனர். ஜேசிபி இயந்திரம் மூலம் கடைகளை இடித்து அப்புறப்படுத்தினர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதே பகுதியில் நடிகர் விஜய்க்கு சொந்தமான சங்கீதா திருமண மண்டபம் உள்ளது. மேம்பால பணிகளுக்காக திருமண மண்டபத்தின் முன்பக்கம் இடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், கடைகள் இடிக்கப்படுவதால் வியாபாரிகள் திரண்டு வந்தனர். பிரச்னை ஏற்படுவதை தவிர்க்க போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். கடைகள் இடிக்கப்பட்டு வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதேபோன்றதொரு மேம்பாலப் பணிகளுக்காகத்தான் முன்பு விஜயகாந்துக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் மண்டபம் இடிக்கப்பட்டது. அதுவே அவரை அன்றைய ஆளுங்கட்சியான திமுக வுக்கு எதிராக பொங்கவைத்தது.
இப்போது விஜய்யின் மண்டபத்துக்கு அப்படி ஒரு ஆபத்து வந்துள்ளது.
விஜய்க்கு சொந்தமாக பல திருமண மண்டபங்கள் உள்ளன. மாவட்டந்தோறும் ஒன்று மண்டபத்தை உருவாக்கும் திட்டமும் அவருக்குள்ளது. சென்னையில் மட்டும் ஷோபா, ஜேஎஸ்ஆர் உள்பட சில திருமண மண்டபங்கள் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக