
கைது செய்யப்பட்டவர்களையும், கைப்பற்றப்பட்ட கப்பலையும் இந்தோனேசிய கடல் படையினர் இந்தோனேசியாவுக்கு கொண்டு செல்கின்றனர். இத்தமிழர்களில் சிறுவர்கள், பெண்கள் ஆகியோரும் அடங்குகின்றனர். நியூசிலாந்து அரசு பொறுப்பேற்று அரசியல் தஞ்சம் வழங்க வேண்டும் என்பது இத்தமிழர்களின் கோரிக்கையாக உள்ளது. இக் கப்பலில் உள்ள தமிழர்கள் அனைவரும் தாம் இந்தோனேசியா செல்லவிரும்பவில்லை என்றும் தமது கப்பலைக் கட்டி இழுத்துச் செல்லவேண்டாம் என்றும் கூறிப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக