நெல்லை: நெல்லை பேட்டை பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ரூ. 100 கோடி மதிப்பிலான வக்புவாரிய நிலத்தை மீட்கக் கோரி மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
நெல்லை பேட்டை பகுதியில் வக்பு வாரியத்துக்கு சொந்தமாக ரூ. 100 கோடி மதிப்பிலான நிலம் உள்ளது. இதை நெல்லை மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியனின் உறவினர் ஸ்டாலின் பாண்டியன் என்பவர் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த நிலத்தை மீட்கக் கோரி மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் ரபீக் தடையை மீறி மாவட்ட கலெக்டர் நடராஜனிடம் புகார் மனு அளித்தார்.
அதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறுகையில், வரும் 24-ம் தேதிக்குள் நிலத்தை மீட்காவிட்டால், பேட்டையில் கரசேவை என்ற போராட்டத்தின் மூலம் நிலம் மீட்கப்படும் என்றார். கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
போடப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக