ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

சிறிலங்காவின் எஸ்.எல்.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு இந்தியா வைத்த ஆப்பு!


இந்தியாவின் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு நிகராக இலங்கை கிரிக்கெட் சபையினால் அறிமுகப்படுத்தப்பட்ட எஸ்.எல்.பி.எல் என்று அழைக்கப்படும் சிறிலங்கா கிரிக்கெட் பிரீமியர் லீக் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வருகின்ற ஜூலை 19 ஆம் திகதி இலங்கையில் ஆரம்பிக்கப்படவிருந்த ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் அடுத்த வருடத்துக்கு பிற்போடப்பட்டுள்ளதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் மாகாண அணிகளுக்கு இடையிலான ருவென்டி ருவென்டி போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் அதில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் எனவும் இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் போட்டியில் பங்குபற்ற இந்திய அணி வீரர்களை அனுமதிக்க முடியாது என இந்திய கிரிக்கெட் சபை அறிவித்ததை அடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது.



இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையானது (BCCI) சர்வதேச கிரிக்கெட் சபையை (ICC) விட அதிகாரம் பொருந்திய அமைப்பாக மாற்றம் கண்டு வருகின்றது....

எந்த ஒரு போட்டியிலும் இந்தியா புறக்கணித்தால் ஏனைய நாடுகளால் ஒன்றும் செய்ய முடியாத கையாலாகாத்தனமே காணப்படுகின்றது....

ஏனெனில் இந்தியாவைப் பகைத்தால் அல்லது இந்தியாவின் ஒரு கோரிக்கையை ஏற்காவிட்டால் கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்பும் ஊடகங்களிலிருந்து அனுசரணை வழங்கும் விளம்பர நிறுவனங்கள் வரை விலகும் தன்மையே காணப்படுகின்றது...

இதனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் கை சர்வதேசத்தில் ஓங்கிக் காணப்படுகின்றது....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக