ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

9 நாடுகளில் 16 புலனாய்வுத் தளங்கள்! சட்டவிரோதக் குடியேற்றவாசிகளைத் தடுக்க கனடா அதிரடி


சட்டவிரோதமாக கனடா நோக்கி வருகின்ற அகதிகள் தொடர்பில் தகவல் வழங்குவதற்காக, ஒன்பது நாடுகளில் 16 புலனாய்வுத் தளங்களை நிறுவுதற்கு கனடா நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை போன்ற நாடுகளிலிருந்து சட்ட விரோதமாக கனடா செல்லும் அகதிகளை கட்டுப்படுத்தும் முகமாக முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த புதிய வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு பல மில்லியன் டொலர்களை கனடா செலவழிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை கனடாவுக்கு சட்டவிரோதமாக சென்ற இலங்கை அகதிகளின் பராமரிப்புக்கான செலவீனங்களுக்காக, கனேடிய குடிவரவுத் துறை திணைக்களம் பல மில்லியன் பெறுமதியான செலவறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு ஓசியன் லேடி கப்பல் மூலம் கனடாவின் விக்டோரியா பகுதியைச் சென்றடைந்த 76 இலங்கையர்களின் பராமரிப்பு செலவீனங்கள் தொடர்பிலும் இந்த செலவறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்காலத்தில் வரக்கூடிய சட்டவிரோத அகதிகளை தடுப்பதற்கான கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பிலும் இந்த நிதிகள் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் ஒன்பது நாடுகளில் நிறுவப்படவுள்ள 16 புலனாய்வுத் தளங்கள், 40 நாடுகளில் உள்ள 67 எல்லைக் கட்டுப்பாட்டுத் திணைக்களங்களுடன் இணைந்து செயற்படும் என கூறப்பட்டுள்ளது.

இதேவேளை இவ்வாறான வேலைத்திட்டங்கள் இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் முன்மொழியப்பட்டன. எனினும் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என கூறப்படுகிறது.

இதன் விளைவாகவே, ஓசியன் லேடி மற்றும் சன் சீ கப்பல் என்பன கனடாவை சென்றடைவதை தடுக்க முடியாதிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக