ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

தென் சூடான் குடியரசு பூமிப் பந்தில் பூத்த புத்தம் புதிய நாடு!


எதிர்வரும் யூலை 09 ஆம் நாள் தென் சூடான் குடியரசு என்ற ஒரு புதிய நாடு பிறக்கவுள்ளது. இலடச்சக்கணக்கான தென் சூடானிய மக்கள் அதன் பிறப்பைக் கொண்டாட இருக்கிறார்கள். தென் சூடானின் தலைநகரம் யுபா (Juba) விழாக் கோலம் பூண்டுள்ளது. தென் சூடான் அடக்குமுறைக்கு எதிராகப் பல ஆண்டுகள் போராடி வந்துள்ளது. ஆபிரிக்காவின் எண்ணெய் வளமிக்க நாடான சூடானுக்கு 1956 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது. 1989 ஆம் ஆண்டு நடந்த இராணுவப் புரட்சியை அடுத்து ஒமர் அல் பக்ஷீர் ஆட்சியைப் பிடித்தார்.


இஸ்லாமிய சட்டத்தை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தார். இதற்கு தென்பகுதியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இனக் கலவரம் வெடித்தது. வடக்கில் அரபு முஸ்லிம்களும், தெற்கில் பழங்குடி இன மக்களும், கிறிஸ்துவர்களும் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள். வடக்குத் தங்களைப் புறக்கணிப்பதாக தெற்குவாசிகள் கருதினர்.
தெற்கில் ஏற்பட்ட இனக்கலவரத்தைத் தொடர்ந்து உருவான சூடான் மக்கள் விடுதலை இயக்கம் தெற்கு சூடானைத் தனியாகப் பிரித்துத் தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று கூறி ஆயுத போராட்டத்தை கையில் எடுத்தது. அது முதல் தென் சூடானியர்கள் தங்களது சுதந்திரத்துக்கும் இறைமைக்கும் போராடி வந்திருக்கிறார்கள். 2005 ஆண்டில்தான் முழுமையான அமைதி உடன்படிக்கை எழுதப்பட்டது. அதன்படி 2011 இல் நேரடி வாக்கெடுப்பு
(referendum) நடத்தி நாட்டை பிரிப்பது என்று முடிவானது. 2011 சனவரி 15 இல் நடந்த வாக்கெடுப்பில் 99 விழுக்காடு மக்கள் தெற்கு சூடான் தனியாகப் பிரிவதற்கு ஆதரவு தெரிவித்தார்கள்.
தென் சூடான் விடுதலைப் போரில் 20 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள். பல இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்தார்கள். பலர் நாட்டைவிட்டு ஒடி வேறுநாடுகளில் அரசியல் தஞ்சம் புகுந்தார்கள். அளவிட முடியாதவாறு நாட்டின் உள்கட்டமைப்பு அழிவுக்கானது.
சமூக, பொருளாதார வாழ்க்கை சிதைக்கப்பட்டது. பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டதால் கல்வி தடைபட்டது. பல தலைமுறைகள் பள்ளிக்கூடங்களுக்கே போகவில்லை. மருத்துவமனைகள் இல்லாததால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துபட்டார்கள். தென் சூடான் அமெரிக்கா இரண்டு நூற்றாண்டுக்கு முன்னர் இருந்த நிலைக்குப் பின்தள்ளப்பட்டு விட்டது எனலாம்.
கடந்த மே மாதம் வட சூடானின் படைகள் எல்லையில் உள்ள சர்ச்சைக்குரிய எண்ணெய் வளம் கொண்ட அப்யேய் (Abyei) நகரத்தைக் கைப்பற்றியது. அப்போது மூண்ட சண்டையில் 100,000 மக்கள் இடம் பெயர்ந்தார்கள். கடந்த மாதம் தென் கோர்டொபொன் (South Kordofan) என்ற பகுதியில் சண்டை நடந்தது. அதன்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்தார்கள்.
சுதந்திரத்துக்குப் பின்னர் நாடு செழிக்கும் வாழ்வு மலரும் என மக்கள் நம்புகிறார்கள். புதிய அரசு இலேசில் தீர்வுகாண முடியாத பல சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. முதலில் நிலம் தொடர்பான தகராறுகள், வட சூடானுக்கும் தென் சூடானுக்கும் இடையிலான எல்லைபற்றிய பூசல்கள தீர்க்கப்பட வேண்டும். மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். புதிய சட்டங்கள் இயற்றப்பட்டு புதிய நீதி முறைமை உருவாக்கப்பட வேண்டும். சிதைந்த உள்கட்டமைப்பு மீள்கட்டியெழுப்ப வேண்டும். வெளிநாட்டு உதவிகளில் தங்கியிருப்பதை ஒழிக்க வேண்டும். இவற்றைப் பன்னாட்டுச் சமூகத்தின் ஆதரவோடும் நல்லெண்ணத்தோடும் செய்து முடிக்கலாம் என தென் சூடானின் தலைவர்கள் நினைக்கிறார்கள்.
தென் சூடானின் விடுதலைப் போராட்டத்தின் போது அமெரிக்காவில் உள்ள பலர் ஆதரவு வழங்கினார்கள். பன்னாட்டு மீட்பு குழு (International Rescue Committee) மருத்துவம் மற்றும் தூயநீர் போன்ற அவசர உதவிகளை வழங்கியது.
தென் சூடானின் சுதந்திர நாளான யூலை 09 நள்ளிரவில் தேவாலயங்களில் மணி அடிக்கப்படும். பறைகள் கொட்டப்படும். பொது இடங்களில் மெழுகுவர்த்தி ஏற்றப்படும். புதிய தென் சூடானிய குடியரசு செழிப்புற பிரார்த்தனைகள் செபிக்கப்படும்.
சூடானின் ஆட்சித்தலைவர் ஓமர் ஹசன் அல்-பஷீர் மற்றும் அய்யன்னா மன்றத்தின் செயலாளர் நாயகம், தென் சூடானின் ஆட்சித்தலைவர் சல்வா கிர் (Salva Kirr) ஆகியோர் உரையாற்றுவார்கள்.
முப்பது ஆபிரிக்க நாடுகளின் அரச தலைவர்கள், வெளியுறவு அமைச்சர்கள், தூதுவர்கள் இந்த வரலாற்றுப் புகழ்படைத்த நிகழ்ச்சியில் நேரில் கலந்து கொள்வார்கள். தென் சூடான் நாட்டுத் தொலைக்காட்சி சுதந்திர நாள் நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்புச் செய்யவுள்ளது. குழப்பங்கள் எதுவும் நடைபெறுவதைத் தடுக்குமுகமாக தென் சூடானின் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
தென் சூடானின் சுதந்திரத்தை தென் சூடானிய சட்டமன்ற அவைத்தலைவர் ஜேம்ஸ் வானி இகா(James Wani Igga) 21 துப்பாக்கி வேட்டுக்கள் மத்தியில் பிரகடனப்படுத்துவார். ஆட்சித்தலைவர் தென் சூடான் குடியரசின் ஆட்சித்தலைவராக பதவி உறுதிமொழி எடுத்துக் கொள்வார். அதனைத் தொடர்ந்து இராணுவ அணிவகுப்பு இடம்பெறும்.
தென் சூடான் குடியரசு ஆபிரிக்காவில் 54 ஆவது நாடாகவும் அய்யன்னா அவையில் அதன் 193 ஆவது உறுப்பினராகவும் மலரப் போகிறது.
1800 லும் 1900 லும் சூடானில் எண்ணெய் கண்டு பிடிக்கப்பட்டது. அதனை அடுத்து அந்த எண்ணெய் வளத்தைக் கையகப்படுத்த அமெரிக்கா, அய்ரோப்பா மற்றும் சீனா தங்களுக்குள் போட்டி போடுகின்றன. மேற்கு நாடுகளை நம்பாதஓமர் ஹசன் அல்-பஷீர் தனது நாட்டின் எண்ணெய் வளத்தையும் அது தொடர்பான உரிமைகளையும் சீனாவுக்குக் கொடுத்துவிட்டார். ஒரு முதலாளித்துவ நாட்டுக்குள்ள பெரும் உற்சாகத்தோடு அந்த எண்ணெய் வளத்தை சீனா சுரண்டிக் கொண்டிருக்கிறது.
மேலே குறிப்பிட்டது போல் தென் சூடான் கிறிஸ்தவ கருப்பு இன ஆபிரிக்க மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியாகும். அவர்கள் நீண்ட காலமாக வட சூடானில் பெரும்பான்மையாக வாழும் அராபியர்களால் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வந்தனர். வட சூடானின் ஒடுக்குமுறையின் உச்சக்கட்டமாக சூடானின் டாவூர் மாகாணத்தில் கொடூரமான இனப்படுகொலைகள் 2003 இல் தொடங்கியது. ஆனால் இது தொடர்பான தகவல்கள் மிகவும் காலம்கடந்தே உலகுக்குத் தெரிய வந்தது. டாவூர் மாநிலத்தில் இதுகாலவரை சுமார் 2 இலட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அப்போது இரண்டு போராளிக் குழுக்கள் டாவூர் மக்கள் திட்டமிட்ட புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்படுவதாகக் குற்றம் சாட்டி சூடானுக்கு எதிராகத் தாக்குதல் தொடுத்தார்கள். சூடான் பதில் தாக்குதல் தொடுத்தது. சூடானிய வான்படை வான் தாக்குதலை நடத்தியது. சூடான் இராணுவம் அராபு ஜன்ஜாவீட் (Janjaweed) ஆயுதக் குழுவுக்கு ஆயுதங்கள் வழங்கியது. இரு குழுக்களுக்கும் இடையிலான சண்டை இரண்டரை ஆண்டுகள் நீடித்தது.
டாவூர் இனப்படுகொலை தொடர்பாக பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் சூடான் ஆட்சித்தலைவர் உமர் அல் பசீருக்கு பிடியாணை பிறப்பித்துள்ளது. அராபிய நாடுகளும் ஆபிரிக்க நாடுகளும் அவர் கைது செய்யப்படுவதற்கோ பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்திடம் கையளிப்பதற்கோ விரும்பவில்லை. அதனால் அவர் சுதந்திரமாக நடமாடுகிறார். அண்மையில் அவர் சீனாவுக்கு உத்தியோகச் செலவு ஒன்றை மேற்கொண்டு திரும்பியுள்ளார். சீனா சூடானின் மொத்த மசகு எண்ணெய் உற்பத்தியில் பாதியை இறக்குமதி செய்கிறது. அதனால் சூடான் அரசை எந்த நிபந்தனையும் இன்றி ஆதரிக்கிறது. சீனா சூடானில் மசகு எண்ணெய், பதனிடும் நிலையங்கள், விவசாய மேம்பாடு ஆகிய துறைகளில் அதிகளவு முதலீடுகளைச் செய்துள்ளது.
பன்னாட்டுக் குற்றவியல் நீதி மன்றம் பிடியாணை பிறப்பிக்கப் போவதாகத் தெரியவந்ததும் சூடானின் டாவூர் மானிலத்தில் இயங்கி வந்த மேற்குலக உதவி நிறுவனங்கள் பலவற்றின் செயற்பாடுகளை நிறுத்தும்படி சூடான் உத்தரவிட்டது. சூடான் அரசினால் கைவிடப்பட்ட டாவூர் மக்களுக்கு உணவு தண்ணீர் மருந்து வசதிகளை வழங்கிவந்த இந்தத் தொண்டு நிறுவனங்கள் உடனடியாக வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டன.
தென் சூடான் சுதந்திர விழாக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு சூடான் மக்கள் விடுதலை இயக்கம் (Sudan Peoples� Liberation Movement (SPLM) அழைப்பு விடுத்துள்ளது.
அந்த அழைப்பை ஏற்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பாக இரண்டு அமைச்சர்கள் தென் சூடானுக்குச் சென்றுள்ளார்கள். இது நாடு கடந்த தமிழீழ அரசுக்கான ஒப்புதல் மட்டுமின்றி ஈழ விடுதலைப் போராட்டத்திற்குப் பன்னாட்டு அரங்கில் கிடைத்த முதல் ஒப்புதலும் ஆகும். 2009 இல் பில்டல்பியா நகரில் நடந்த நாடு கடந்த தமிழீழ அரசின் அமர்வில் சூடான் மக்கள் விடுதலை இயக்கச் சார்பாளர் கலந்து கொண்டு தென் சூடானின் விடுதலை போராட்டத்திற்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் உள்ள ஒற்றுமை பற்றியும், விடுதலைப் போராட்டங்கள் சந்திக்கும் அறைகூவல் பற்றியும் பேசியது நினைவிருக்கலாம்.
தென் சூடானிய மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் பலத்த ஒற்றுமை உண்டு. தமிழீழ மக்களைப் போலவே தென் சூடானிய மக்கள் இன, மொழி, பண்பாடு, சமய அடிப்படையில் வட சூடானிய அரசால் அடக்கி ஒடுக்கப்பட்டார்கள். அடக்குமுறையை எதிர்த்து அவர்கள் ஆயுதம் ஏந்தி 25 ஆண்டுகள் போராட நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். அதில் பல இலட்சம் பேர் கொல்லப்பட்டார்கள்.
அந்தக் கொலை இனப்படு கொலை என அய்யனாவின் பன்னாட்டு நீதிமன்றம் முடிவு செய்து சூடான் ஆட்சித் தலைவருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பித்துள்ளது. சிறிலங்காவின் ஆட்சித்தலைவர் மகிந்த இராசபக்சேக்கு எதிராகவும் போர்க் குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதற்கு போதிய சான்றுகள் இருக்கின்றன.
தென் சூடானிய மக்களைப் போலவே ஈழத் தமிழர்களும் பாதுகாப்புடன் சுதந்திரமாக வாழ இறைமையுடன் கூடிய தனி நாடு இன்றியமையாததாகும். அதற்கான நேரடி வாக்கெடுப்பு தென் சூடானில் எடுக்கப்பட்டது போல வட - கிழக்கிலும் அய்யன்னாவினால் எடுக்கப்பட வேண்டும். இனத்தால், மொழியால், பண்பாட்டால், சமயத்தால் வேறுபட்ட ஈழத் தமிழர்களுக்கு சுயாட்சி உரிமை வழங்கப்பட வேண்டும்.
இலங்கையில் நடந்த போருக்குப் பொறுப்பேற்பு தொடர்பாக ஆராய அய்யன்னா அவையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்களால் நியமிக்கப்பெற்ற வல்லுநர் குழுவின் அறிக்கை 25 - 04 - 2011 இல் வெளியாகியது. அவ்வறிக்கையில் சிறிலங்கா அரசுக்கு எதிராகக் கீழ்க் குறிப்பிடப்படும் குற்றச்சாட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
1. பரவலான சரமாரிக் குண்டு வீச்சுக்குப் பொது மக்கள் பலியாக்கப் பட்டது.
2. மருத்துவ மனைகளும் மக்கள் பணி மையங்களும் குண்டு வீசித் தாக்கப் பட்டமை.
3. மக்களுக்கு மனிதாபிமான உதவி மறுக்கப்பட்டமை.
4. இடம் பெயர்ந்த மக்களுக்கும் விடுதலைப் புலி உறுப்பினருக்கும் எதிரான பாரிய மனித உரிமை மீறல்கள்.
5.போர்க்களத்திற்குப் புறத்தே செய்தியாளர்களுக்கும் அரசிற்கு முரணானவர்களுக்கும் ஏதிரான மனித உரிமை மீறல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டமை.
கீழ்க்கண்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக பன்னாட்டு விசாரணை நடைபெறவேண்டுமென அய்யன்னா வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது.
அய்யன்னா வல்லுநர் குழுவின் பரிந்துரைகள்
1) போர்க்குற்ற‌ம், ம‌னித‌ குல‌த்திற்கு எதிரான‌ குற்ற‌ங்க‌ள் ந‌டைபெற்ற‌த‌ற்கான‌ சான்றுக‌ள் கிடைத்துள்ள‌தால் இவை ப‌ற்றி ஒரு சுயேட்சையான‌ ப‌ன்னாட்டு விசார‌ணைக்குழு விசாரிக்க‌ வேண்டும்.
2) த‌ற்பொழுதும் அங்கு ந‌டைபெற்றுக்கொண்டிருக்கும் வ‌ன்முறைக‌ள் நிறுத்த‌ப்ப‌ட‌வேண்டும்.
3) விசாரணை ப‌ன்னாட்டு ச‌ட்ட‌ விதிக‌ளின்ப‌டி ந‌டைபெற‌ வேண்டும்.
4) அய்யன்னாவும் இந்த‌ச் சிக்கலில் சில‌ த‌வ‌றுக‌ளைச் செய்துள்ள‌து.
5) மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும் என்ற வாதம் வலுப்பட்டுள்ளது.
விடுதலை பெற்ற தென் சூடான் மக்களின் மகிழ்ச்சியில் ஈழத் தமிழர்கள் ஆகிய நாமும் பங்குகொள்கிறோம். விடுதலைக்கு அவர்கள் கொடுத்த விலை கொட்டிய குருதி வீண்போகவில்லை. இப்போது கண்ணினும் இனிய சுதந்திரம் கிடைத்திருப்பதால் அவர்கள் இனிமேல் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் இறைமையுள்ள தனிநாட்டில் வாழ முடியும். புத்தம் புதிய நாடான தென் சூடான் குடியரசுக்கு எமது தோழமை கலந்த நல் வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக