ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

விதவிதமான டீ தயாரிப்பது எப்படி?


டீ தயாரிக்க கூடிய முறைகளையும்
எலுமிச்சை டீ
சூடான கொதிக்க வைத்த டீயில் பாலுக்கு பதிலாக சிறு துளி எலுமிச்சை சாற்றை பிழிந்து அதில் சர்க்கரை போட்டு நன்றாக கலந்து குடிக்கவும்.


சூடான கார டீ
தேவையான பொருட்கள்:
தண்ணீர்: 2 லிட்டர்
சர்க்கரை: 30 ml
கிராம்பு: 1/2 டீ ஸ்பூன்
ஆரஞ்ச் ஜூஸ்: 1/4 pint (1 pint - 500 ml)
2 எலுமிச்சைபழம் சாறு.
பட்டை


செய்முறை:
பட்டை, கிராம்பு இவற்றை தண்ணீரில் கலந்து கொதிக்க விடவும். டீ தூளை போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். சர்க்கரை போடவும், பழச்சாறுகளை போடவும், தேவையான சூடுக்கு ஆற்றிக் கொள்ளவும். சுமார் 12 பேருக்கு கார டீ பரிமாறலாம்.


மசாலா டீ
கிராம்பு, பட்டை, நட்மெக், இஞ்சி, ஏலக்காய் மற்றும் மிளகு ஆகியவற்றை கொதிக்கின்ற தண்ணீரில் போட்டு கொதித்தவுடன் டீ தூள் ஒரு டீஸ்பூன் போட்டு சிறிது நேரம் கொதித்தவுடன் வாடி கட்டவும்.


ஐஸ் மின்ட் டீ
ஒரு தம்ளரில் உடைத்து வைத்துள்ள ஐஸ் கட்டியில் டீ டிக்காசனை ஊற்றவும். அதில் எலுமிச்சை மற்றும் ஆரஞ்ச் துண்டுகளை போடவும். சிறிது புதினா இலைகளை தண்ணீர் கலந்து மிக்ஸ்யில் அடித்து அதில் போடவும், பின்னர் பரிமாறினால் சுவையாக அருந்தலாம்.


ஆப்பிள் அபரிடிஃப்
ஒரு தம்ளரில் டீ டிகாஷன் மற்றும் ஆப்பிள் ஜூஸ் இரண்டும் சம அளவில் ஊற்றவும். அதில் சிறிது ஐஸ் கட்டிகளை உடைத்து போடவும். அதில் ஒரு டீஸ்பூன் சீனி மாற்று மேலுமிச்சை பழ சாறுகளை ஊற்றவும். நன்றாக கலந்த பின் பரிமாறினால் நன்றாக இருக்கும்.


டீ டிக்காஷன் செய்முறை
1/2 லிட்டர் பச்சை தண்ணீரில் 2 டேபிள்ஸ்பூன் டீ தூளை கலந்து 12 மணி நேரம் ஊற வைக்கவும். அதன் பின்பு வடிகட்டினால் டீ டிக்காஷன் ரெடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக