‘ வாஷிங்டன்: காட்சிக்கு ஏற்ப ‘கமகம’ வாசனையை வெளியிடும் டிவி விரைவில் வர இருக்கிறது. இதுதொடர்பாக சாம்சங் டிவி நிறுவனமும் அமெரிக்காவின் சான்டியாகோ பல்கலையும் இணைந்து நடத்திய ஆராய்ச்சி வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஹைடெபனெஷன், 3டி என்று தொடர்ந்து புதுப் புது தொழில்நுட்பங்கள் அறிமுகமாகின்றன. இந்த வரிசையில் அடுத்தது.. ‘ஸ்மெல் ஓ விஷன்’. அதாவது, டிவி காட்சியோடு சேர்ந்து வாசனையும் வரும். டிவியில் சாம்பிராணி கொளுத்தும் காட்சி வந்தால் வீடு கமகமக்கும். டிவியில் தாளித்தால், வீட்டில் கடுகு வாசம் வீசும். இதுதொடர்பான ஆராய்ச்சி பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. டிவியில் வாசனை அடிக்க வைப்பது தொடர்பாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான்டியாகோ பல்கலையும் சாம்சங் டிவி நிறுவனமும் ஆராய்ச்சி நடத்தின. ஆய்வு தற்போது வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இதுபற்றி அமெரிக்க பேராசிரியர் சன்கோ ஜின் கூறியதாவது: ‘ஸ்மைல் ஓ விஷன்’ டிவியில் இருந்து ஆயிரக்கணக்கான வாசனைகள் வெளியேறும் வகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சிப்ஸ், பீட்சா, புழுதி, காடு, சென்ட் என பல்வேறு வாசனைகள் டிவியில் இருந்து வெளிப்படும். இதற்காக அமோனியா போன்ற ரசாயன திரவங்கள் பயன்படுத்தப்படும். மின்சாரத்தின் மூலமாக உலோக தகட்டை சூடாக்கச் செய்து இத்தகைய திரவத்தில் நனைக்கும்போது விதவிதமான வாசனைகள் வெளியேறும். ஒலி, ஒளி காட்சிகள் மின்காந்த அலைகளாக மாற்றப்பட்டு டிவிக்கு வந்து சேர்வதுபோல, வாசனையை உருவாக்கச் செய்வதற்கான சிக்னலும் மின்காந்த அலைகளாக மாறி, ஒலி, ஒளியுடனேயே டிவிக்கு வரும். காட்சிக்கேற்ப வாசனை வெளியாகும். இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செல்போனையும் தயாரிக்க முடியும். இவ்வாறு சன்கோ கூறினார். ஆய்வு பணிகள் முடிவடைந்து விட்டது. இதையடுத்து, ‘வாசனை’ டிவியை உருவாக்குவதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. சினிமாவில் வாசனை சினிமாவில் இந்த முயற்சி முதன்முதலில் மேற்கொள்ளப்பட்டது 1906-ல். அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலம் பாரெஸ்ட் சிட்டியில் உள்ள தியேட்டரில் ரோஜாப்பூ தொடர்பான நியூஸ்ரீல் காட்சியின்போது ரோஸ் எசென்ஸை பஞ்சில் நனைத்து மின்விசிறி முன்பு வைக்கச் செய்து தியேட்டர் முழுவதும் வாசனை பரப்பினார்கள். நியூயார்க்கின் பிராட்வே தியேட்டரின் மேல் பகுதியில் இருந்து தானாக வாசனை வரும் ஏற்பாடுகள் 1933-ல் செய்யப்பட்டன. 1960-ல் வெளிவந்த ‘சென்ட் ஆப் மிஸ்ட்ரி’ சினிமா காட்சிக்கு ஏற்ப சுமார் 30 வாசனைகள் வெளியேற்றி அசத்தினர். 1982-ல் ‘பாலியெஸ்டர்’ என்ற படத்துக்காக டிக்கெட் கவுன்டரிலேயே எல்லாரிடமும் தனித்தனி அட்டை கொடுக்கப்பட்டது. ஒவ்வொன்றிலும் 10 புள்ளிகள் இருக்கும். ‘இப்போது ஒன்றாம் எண் புள்ளியை சுரண்டவும்..’ என்று சினிமா திரையில் வாசகம் பளிச்சிடும்போது அந்த புள்ளியை அவரவர் சுரண்ட வேண்டும். அந்த காட்சிக்கேற்ற வாசனை அந்த புள்ளியில் இருந்து வெளிப்படும். இதுபோல பல்வேறு சினிமாக்களில் வாசனை முயற்சி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. 1965-ல் பிபிசி டிவி ஒரு பேட்டி ஒளிபரப்பியது. ‘‘இந்த பேட்டியின்போது காட்சிக்கு ஏற்ப உங்கள் வீட்டு டிவியில் இருந்து வாசனை வரும்’’ என்றும் அறிவித்தது. பேட்டியில் வந்தவர் வெங்காயத்தை உரித்தார். காபி குடித்தார். ஆனால், டிவியில் எந்த வாசனையும் இல்லை. ‘‘சாரி! ஏப்ரல் ஃபூல்’’ என்று பேட்டி முடிந்ததும் அறிவித்தது பிபிசி. For more NEWS updates, follow us on Twitter or join us on Facebookமின்னஞ்சல் | 0 0 0 New மேலும் சில
|
கமகம’ டிவி, செல்போன் விரைவில் வருது!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக