ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

சிறுவனை சுட்டுக்கொன்ற ராணுவ அதிகாரி சிக்கியது எப்படி?


சிறுவனை சுட்டுக்கொன்ற ராணுவ அதிகாரி சிக்கியது எப்படி?சிறுவன் தில்ஷானை சுட்டுக்கொன்ற ராணுவ அதிகாரி ராமராஜ் பாண்டியன் சிக்கியது பற்றி சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. சேகர் கூறியதாவது:-  
கடந்த 3-ந்தேதி மதியம் 1 மணி அளவில் தீவுத்திடல் அருகே உள்ள கொடி மர சாலையில் அமைந்துள்ள ராணுவ அதிகாரிகள் குடியிருப்பில் 13 வயது சிறுவன் தில்ஷான் துப்பாக்கியால் சுடப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற தமிழக முதல்- அமைச்சர் உத்தரவிட்டார்.
 
இதையடுத்து கடந்த 6 நாட்களாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்பவம் நடைபெற்ற இடம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
 
சம்பவத்தை நேரில் பார்த்த சிறுவர்கள் மற்றும் சம்பவம் நடந்தபோது ராணுவ வளாகத்தில் இருந்த அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அங்கு கிடைத்த துப்பாக்கி குண்டு, சேகரிக்கப்பட்ட தடயங்கள் ஆகியவற்றை வைத்தும் விசாரித்தோம்.
 
ராணுவ குடியிருப்பில் பணிபுரியும் பாதுகாவலர்கள், அதிகாரிகள் வீட்டில் பணிபுரியும் வேலைக்காரர்களிடமும் விசாரித்தோம். மேலும் துப்பாக்கி சூடு நடைபெற்ற ராணுவ அதிகாரிகளின் வீடுகளில் கோர்ட்டு அனுமதி பெற்று சோதனைகளும் நடத்தப்பட்டன.
 
முதலில் சிறுவன் தில்ஷான் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கி குண்டை தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பி அது எந்த வகையிலான துப்பாக்கி என்பதை கண்டுபிடித்தோம். அதன் பிறகு தில்ஷானுடன் சென்ற சிறுவர்களிடம் விசாரித்தோம்.
 
முதலில் 3 பேர் மட்டுமே அங்கு சென்றதாக தகவல் கிடைத்தது. அதன் பிறகு போலீசாரின் தீவிர விசாரணையில் 4-வதாக ஒரு சிறுவனும் அங்கு இருந்ததை கண்டுபிடித்தோம். அவனை பிடித்து விசாரித்தபோது துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பின் வயதான ஒருவர் சம்பவ இடத்தில் துப்பாக்கி சூடு தடயங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
 
இதன் பிறகு அந்த சிறுவனை அழைத்துக் கொண்டு சந்தேகத்துக்கு இடமான அதிகாரிகளை அடையாளம் காட்ட அழைத்துச் சென்றோம். அவன் ஓய்வு பெற்ற லெப்டினன்ட் கர்னல் ராமராஜ் பாண்டியனை அடையாளம் காட்டினான்.
 
இதையடுத்து அவருக்கு முறைப்படி சம்மன் அனுப்பி விசாரணையை தொடங்கினோம். ஆரம்பத்தில் சிறுவனை சுட்டுக் கொன்றதை மறுத்தார். என்னிடம் துப்பாக்கி எதுவும் இல்லை என்று கூறினார். ஆனால் அவரது வீட்டில் பறிமுதல் செய்த ஆவணங்களை வைத்து அவர் துப்பாக்கி லைசென்ஸ் புதுப்பிக்க புறநகர் போலீசில் மனு செய்து இருப்பதை கண்டு பிடித்தோம். இதனை காட்டி அவரிடம் விசாரித்தபோது உண்மையை ஒப்புக் கொண்டார்.
 
தில்ஷானை சுட்டுக்கொன்று விட்டு அந்த துப்பாக்கியையும், மீதம் இருந்த துப்பாக்கி குண்டுகளையும் நேப்பியர் பாலம் அருகே கூவத்தில் வீசி விட்டதாக கூறினார். அந்த இடத்தையும் அடையாளம் காட்டுவதாக உறுதியளித்தார்.
 
இதையடுத்து நேற்று மாலை நேப்பியர் பாலம் அருகே கூவம் ஆற்றுப் பகுதியில் தீயணைப்பு படையினர் உதவியுடன் துப்பாக்கியையும், துப்பாக்கி குண்டுகள் வைக்கப்பட்டு இருந்த பாக்சையும் மீட்டோம். கூவத்தில் வீசிய தோட்டாக்களை கைப்பற்றினோம். துப்பாக்கியை மறைக்க அவர் பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
 
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக