ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

உத்தரபிரதேசம் மாநிலத்தில் ரயில் தடம் புரண்டது: 20 பேர் பலி, 100 பேர் படுகாயம்


உத்தரபிரதேசம் மாநிலத்தில் ரயில் தடம் புரண்டது: 20 பேர் பலி, 100 பேர் படுகாயம்மேற்கு வங்கம் மாநிலம் ஹவுராவில் இருந்து டெல்லி நோக்கிச் சென்ற கல்கா எக்பிரஸ் இன்று 12.30 மணி அளவில் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் மற்றும் பத்தேஹ்பூர் மால்வா ரயில் நிலையங்களுக்கு இடையே திடீரென தடம் புரண்டது. ரயிலின் 13 பெட்டிகள் தடம் புரண்டன.
 
110 கி.மீ. வேகத்தில் சென்று கொண்டிருந்தபோது எமர்ஜென்சி பிரேக்கை திடீரென்று பயன்படுத்தியதால்தான் ரயில் தடம்புரண்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 20 பேர் பலியாகினர், 100 பேர் காயம் அடைந்தனர்.
 
காயம் அடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர். 2 மருத்துவ ரயில்கள் சம்பவ இடத்திற்கு உடனே விரைந்துள்ளன.  மீட்புப் பணிகளை மேற்கு வங்க போலீசாரும் இராணுவத்தினரும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
 
விபத்துக்குள்ளான கல்கா எக்ஸ்பிரஸ் ரயில் குறித்து விபரம் அறிய விரும்புவோர்  
 
அலிகார் - 0571 - 2403055/56  
 
குஜ்ரா - 05738 - 253084/85  
 
பதேர்பூர் - 05180-222025, 222026, 222436  
 
புதுடெல்லி - 011-23342954, 23341074 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்.
 
இந்த விபத்தால் ஹவுரா-டெல்லி வழி ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக