பாகிஸ்தானின் பஞ்சாப் கவர்னர் சல்மான் தஸீர் அவரது பாதுகாவலனாலேயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இஸ்லாமியத்தைக் கேள்விக்கு உட்படுத்தி நானெழுதிய சில பதிவுகளுக்கு எதிர்ப்பாக வந்த பதிவுகளில் இருந்த சினம், மொழி நடை, சிந்தனை ஓட்டம், கொடுத்த பதில்கள் எல்லாம் முதலில் நெருடலாக இருந்தன. மற்ற மதங்களைப் பற்றி எழுதும்போது வராத எதிர்ப்புகள், அதுவும் மிகவும் க்டுமையான எதிர்ப்புகள், இஸ்லாமைப் பற்றி எழுதும்போது மட்டும் வரவே அதற்காகவே மேலும் மேலும் இஸ்லாமைப் பற்றிய அறிந்து கொள்ள ஆவல் எழுந்தது. அதுவே ஒரு தொடர்கதையாகப் போனது. ஆனாலும் ஏன் இந்த அளவு எதிர்ப்புகள் என்ற நினைவுக்கு இன்றைய செய்தி ஒன்று சிறிது பதிலளித்தது.
இந்நிகழ்ச்சி பாகிஸ்தானின் இணையப் பதிவர்களிடையே விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.'Citizens for Democracy' என்ற ஓரமைப்பு இந்த கடும் சட்டத்தை நீக்க வேண்டுமென்கிறது. ஒரு பதிவாளர் தன் பதிவில் சொன்னது: "63 ஆண்டுகளுக்கு முன் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட நெருப்புக் கிடங்கில் இன்னும் நாம் வெந்து சாகிறோம். அறிவற்ற, பகுத்தறிவில்லாத, மிகவும் மோசமான இச்சூழலை தக்கவைக்கவே மதம் துணை போகிறது. சல்மான் இந்தப் பைத்தியக்காரத்தனத்திற்கு இரையானார். யாருக்கும் இங்கு பாதுகாப்பில்லை ... "
சுட்டுக் கொன்ற பாதுகாப்பாளனை விடுதலை செய்ய வேண்டும் என்றும் ஒரு குழு குரலெழுப்புகிறது. ஆனாலும், இன்னொரு குரல் ...
"அனுபவித்தவை போதும். இன்னொரு வீர மரணம் .. அவரது மரணம் ஒரு தியாகியின் மரணம். இந்த மூடத்தனம் முடிய வேண்டும். தேவதூஷணச் சட்டங்களும் அதனோடு இணைந்த மற்ற கருப்புச் சட்டங்களும் நீக்கப்பட வேண்டும். இறந்த தஸீரின் மரணம் ஒரு புதிய பாதையைத் திறந்துள்ளது. தஸீர் இறந்து விடவில்லை ... இன்னும் நம்முடன் தானிருக்கிறார். அவர் நம்மைப் பார்த்து விடும் அறைகூவல், "நான் என் கடமையைச் செய்து விட்டேன்; நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக