இந்த மாளிகைக்கு வருமான வரி செலுத்தும்படி வருமான வரித்துறை அலுவலகம் ஷாருக்கானுக்கு 2008-2009 ஆம் நிதியாண்டில் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், "வர்த்தகத்திற்காகவோ அல்லது பணிபுரிந்ததற்குப் பரிசாகவோ இந்த வீடு பரிசாக வழங்கப்படவில்லை என்பதால், அதற்கு வரி கட்ட வேண்டியது இல்லை" என்று ஷாருக்கான் வருமான வரித்துறைக்குப் பதிலளித்திருந்தார்.
இதனை ஏற்றுக்கொள்ளாத வருமான வரித்துறை, கடந்த டிசம்பர் 27-ந் தேதி அன்று, அவருக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில், "பரிசு வழங்கிய நிறுவனம் தனது திட்டத்திற்காக ஷாருக்கானின் பெயரைப் பயன்படுத்தி விளம்பரம் செய்து வருமானம் பார்த்துள்ளது. எனவே, வருமான நோக்கில் வழங்கப்பட்ட அம்மாளிகைக்கு வருமானவரி கட்டியே ஆக வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக