ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள 2 ரகசிய அறைகளில் புதையல் உள்ளதா?


திருவாரூர் : திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள 2 ரகசிய அறைகளில் ஏராளமான நகைகளும், வைரகற்களும் இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் கூறியதாவது: திருவாரூர் தியாகராஜர் கோயிலை கங்கைகொண்ட முதலாம்
ராஜேந்திரசோழன் பரவை நங்கையார் என்பவரின் வேண்டுகோளுக்காக புதுப்பித்து, கோயில் முழுவதையும் செம்பு மற்றும் பொன்னாலான தகடுகளால் போர்த்தி அழகு செய்தான் என கோயிலில் உள்ள கல்வெட்டு செய்திகள் கூறுகின்றன.

மேலும் இந்த பணி 1032ம் ஆண்டு முடிவடைந்து, ராஜேந்திர சோழனும் பரவை நங்கையாரும் இக்கோயிலுக்கு வந்து வழிபாடு செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் ரகசிய அறைகள் திறக்கப்பட்டு, ஏராளமான தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த கற்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைபோல் திருவாரூர் தியாகராஜசாமி கோயிலிலும் 2 ரகசிய அறைகள் இருக்கிறது. இந்த அறைகளை திறந்தால் விலை உயர்ந்த பொருட்கள் இருக்க வாய்ப்புள்ளது.

அர்த்த மண்டபத்துக்கு பின்புறம் கருங்கல்லால் அடைக்கப்பட்டுள்ள ஒரு அறை உள்ளது. இவ்வாறு அறை இருப்பது தெரியாமல் மூடுவதற்கு கல் திரையிடுதல் என பெயர். பகைவர்களிடம் இருந்து பாதுகாக்க, கோயில்களில் உள்ள முக்கிய திருமேனிகள் விலை உயர்ந்த பொருட்களையும் கருவறையில் வைத்து மூடச்செய்வது மன்னர்களின் வழக்கம். இந்த வகையில் இந்த அறை கல்லால் திரையிடப்பட்டு மூடப்பட்டிருக்கலாம். அதைப்போல் மேற்கு பிரகாரத்தில் உள்ள ஆனந்தீஸ்வரர் சன்னதியிலும் ஒரு ரகசிய அறை உள்ளது. இதன் உள்ளேயும் ஏராளமான விலை உயர்ந்த பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம். இவ்வாறு பாலசுப்ரமணியன் கூறினார்.

ரகசிய அறைகளில் இருப்பது என்ன?

கடந்த 1758ம் ஆண்டு திருவாரூர் கோயிலில் பிரெஞ்ச் தளபதி லாளி தலைமையில் சூறையாடல் நடைபெற்றது. அப்போது, கோயிலில் நெல் தவிர பிற பொருட்களை அவர்களால் கைப்பற்ற முடியவில்லை. கோபமடைந்த லாளி, கோயிலில் பணியாற்றிய குருக்கள்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றான். எனவே திருவாரூர் கோயிலின் உடைமைகள், பிரெஞ்ச்காரர்களுக்கு பயந்து 2 ரகசிய அறைகளிலும் மறைக்கப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக