ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

நார்வேயில் நடந்த துப்பாக்கி சூடு - வெடிகுண்டு தாக்குதலில் 87 பேர் சாவு; போலீஸ் உடையில் தாக்கியவர் கைது



நார்வேயில் நடந்த
 
 துப்பாக்கி சூடு - வெடிகுண்டு தாக்குதலில் 87 பேர் சாவு;
 
 போலீஸ் உடையில் தாக்கியவர் கைதுநார்வேயின் தலைநகர் ஆஸ்லோவில் உள்ள 20 மாடி கட்டிடத்தில் பிரதமர் அலுவலகம் இயங்கி வருகிறது. நேற்று அந்த கட்டிடத்தில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார்கள். அதில், 7 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர். குண்டு வெடிப்பு சம்பவத்தின்போது பிரதமர் ஜெனஸ் ஸ்டோல் டன்பெர்க் அலுவலகத்தில் இல்லை.
 
அதனால் அவர் உயிர் தப்பினார்.   குண்டு வெடித்தபோது அந்த 20 மாடி அரசு கட்டிடம் இடிந்து நொறுங்கியது. அதில் இருந்து கரும்புகை வெளியேறியது. கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி, ஜன்னல்கள் நொறுங்கி விழுந்தன. கட்டிடத்தின் ஒரு பகுதி கரும்புகையுடன் தீப்பிடித்து எரிந்தது. காயம் அடைந்த மக்கள் ரத்த காயத்துடன் ரோடுகளில் ஓடினர். இதனால் அந்த பகுதி முழுவதும் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.  
 
இச்சம்பவம் நடந்த அடுத்த சில மணி நேரத்தில் ஆஸ்லோ புறநகர் பகுதியில் உள்ள யுடோயா தீவில் ஒரு மர்ம நபர் புகுந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். அங்கு பிரதமரின் ஆளும் தொழிலாளர் கட்சியின் இளைஞர் முகாம் நடந்தது. அதில், “டீன் ஏஜ்” வாலிபர்கள் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். அப்போது போலீஸ் உடையில் உயரமான ஒரு மர்ம நபர் அங்கு வந்தான்.
 
அவன் முகாமில் கலந்து கொண்ட வாலிபர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான்.   அதில் இருந்து தப்பிக்க வாலிபர்கள் அங்கு மிங்கும் ஓடினர். பலர் கடலுக்குள் குதித்தனர். தொடக்கத்தில் 10 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். ஆனால், இன்று காலை சாவு எண்ணிக்கை அதிகரித்தது. இந்த 2 சம்பவங்களிலும் சேர்த்து இதுவரை 87 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராள மானவர்கள் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  
 
இதற்கிடையே, போலீஸ் உடையில் வந்து இளைஞர்கள் முகாமில் துப்பாக்கி சூடு நடத்தியவனை போலீசார் கைது செய்துள்ளனர். அவனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட இளைஞர் முகாமிலும் பிரதமர் கலந்து கொள்வதாக இருந்தது. எனவே, அவரை குறிவைத்து தான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதற்கான காரணம் குறித்து பிடிபட்ட நபரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.  
 
ஆனால், குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு இதுவரை எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை. இந்த தாக்குதல்களுக்கு ஜெனஸ் ஸ்டால் டன்பெர்க் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இச்சம்பவங்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக