2 ஜி வழக்கு வலுவிழந்துவிட்டது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா. கூறினார் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் 2ஜி வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை நடந்தது. சிபிஐ வழக்கறிஞர் யூ.யூ. லலித் வாதாடிக் கொண்டிருந்தார். அப்போது லலித் பேசுவது தனக்கு சரியாக கேட்கவில்லை என்றும், உரக்கப் பேச வேண்டும் என்றும் யூனிடெக் வயர்லெஸ் நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.பி.சிங் கேட்டுக் கொண்டார்.
2ஜி வழக்கு நாளுக்கு நாள் வலுவிழந்து வருகிறது, அதனால் தான் மெல்லப் பேசுகிறார்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்தார். வரும் திங்கட்கிழமை நடக்கும் வாதத்தின்போது ஒலிப்பெருக்கி வைக்குமாறு ஸ்வான் டெலிகாம் நிறுவனர் ஷாகித் பால்வாவின் வழக்கறிஞர் மஜீத் மேனம் கேட்டுக் கொண்டார்.
ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவான வாதத்தின்போது அரசு வழக்கறிஞர் யூ.யூ. லலித் கூறுகையில், "ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் உரிமம் வைத்துள்ள டாடா டெலிசர்வீஸ் நிறுவனம் இரட்டைத் தொழில்நுட்ப உரிமம் கோரி விண்ணப்பித்திருந்தது. ஆனால் அதன் மீதான கோப்பு 35 நாட்களுக்கு இழுத்தடிக்கப்பட்டது. டெல்லிக்கான உரிமத்தை ஏற்கனவே ஸ்வான் டெலிகாமிற்கு வழங்கிவிட்டதாக டாடா நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்டது.
டாடா நிறுவனத்திற்கு எந்த காரணமும் இல்லாமலேயே இரட்டைத் தொழில்நுட்ப உரிமம் மறுக்கப்பட்டது. இது தவிர பிஎஸ்என்எல் நிறுவனத்தி்ன் கட்டமைப்பை பயன்படுத்திக் கொள்ள ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.
ரிலையன்ஸ் நிறுவனம் 1-3- 2007 அன்று ஹெச்.டி.எப்.சி.க்கு எழுதிய கடிதத்தில் ஸ்வான் டெலிகாம் தனது குழுமத்தில் உள்ள நிறுவனங்களில் ஒன்று என்று குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் ஸ்வான் டெலிகாம் ரிலையன்ஸின் அங்கம் தான் என்பது நிரூபணமாகிவிட்டது என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக