தமிழ்நாட்டில் அரசு கேபிள் டி.வி. கடந்த தி.மு.க. ஆட்சியின்போது தொடங்கப்பட்டது. ஆனால் அது செயல்படாமல் முடங்கி விட்டது.
செயலற்ற நிலையில் இருந்த அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர முதல்- அமைச்சர் ஜெயலலிதா தீவிர முயற்சி எடுத்து வருகிறார். இதற்காக தனி அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசு கேபிள் டி.வி. திட்டத்தை செயல்படுத்த அனைத்து மாவட்ட கேபிள் டி.வி. ஆபரேட்டர்களையும் அழைத்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். சுமார் 50 லட்சம் இணைப்புகளுடன் அடுத்த மாதம் 15-ந்தேதி அரசு கேபிள் டி.வி. செயல்படும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு தற்போது தஞ்சை, கோவை, நெல்லை, வேலூர், சேலம், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் நேரடி கட்டுப்பாட்டு அறை (கண்ட்ரோல் ரூம்) உள்ளது. இதை 32 மாவட்டங்களுக்கும் கொண்டு வர ஏற்பாடு நடக்கிறது.
முதற்கட்டமாக 16 இடங்களில் இதை அமைக்க உள்ளனர். ஒவ்வொரு ஊரில் உள்ள கேபிள் டி.வி. ஆபரேட்டர்களும் இதற்கு முழு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
அரசு கேபிள் டி.வி. நிறுவனம் செயல்படும்போது ஒளிபரப்பு காட்சிகள் தெளிவாக தெரிய வேண்டும் என்பதற்காக தரமான ஓ.எப்.சி. கேபிள்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது. கேபிள் இழுப்பதற்கு புதிதாக கம்பங்கள் அமைக்கவும் அதை பராமரிக்கவும் தனியாக ஏற்பாடுகள் நடக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக