யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி சபை தேர்தலில் ஆளும் தரப்பு சார்பில் பெருமெடுப்பில் யாழ் குடாநாட்டில் பிரச்சாரங்கள் இடம்பெற்றது. குறிப்பாக அமைச்சர்களின் படையெடுப்பு, ஜனாதிபதியின் பிரசன்னம் போன்ற நடவடிக்கையினால் யாழ் குடாநாட்டு தேர்தல் களம் என்றும் இல்லாதாவாறு களைகட்டி இருந்தது என்று கூறலாம்.
குறிப்பாக எவ்வாறாவது உள்ளூராட்சி சபைகளினை கைப்பற்றி விடவேண்டும் என்னும் நோக்கில் ஆளும் தரப்பு வெவ்வேறு வகையான பிரச்சார உத்திகளினை கையாண்டு இருந்தது.
குறிப்பாக யாழ் நகரின் முன்னணி நகரங்களில் இசை வாகன நிகழ்சிகளினை நடத்தி கவர்ச்சி கன்னிகளைக் கொண்டு வந்து வீதிகளில் குத்தாட்ட நடனம் போட வைப்பதன் மூலம் வாக்கு வேட்டையினை மேற்கொண்டது அரசு.
இவ்வாறான கேளிக்கை பிரச்சாரம் முக்கிய போக்குவரத்து வீதிகள் மூடப்பட்டு நகரின் முக்கியமான சந்திகளில் இடம்பெற்றது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு மட்டும் அல்லாமல் வீதியால் சென்ற மக்கள் பல அசௌகரியங்களுக்கும் ஆளாகினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
யாழில் புது உதயம் என்ற பெயரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உருவப்படம் தாங்கிய வாகன ஊர்தியிலே இவ் இசை நிகழ்சி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக