ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

நகை தயாரிப்பு தொழில்நுட்பம்!



tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperரத்தினக் கல், வைர நகைகள் வடிவமைப்பு மற்றும் நகை தயாரிப்பு போன்றவற்றை பற்றி படிப்பது ஜெம்மாலஜி எனப்படும். இப்படிப்பை முடிப்பவர் ஜெம்மாலஜிஸ்ட் எனப்படுகிறார். இதில், கம்ப்யூட்டர் அடிப்படையில் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு பணிகள் கற்றுத்தரப்படுகின்றன. விலை உயர்ந்த கற்களை அவற்றின் அமைப்பு மற்றும் பணமதிப்பு அடிப்படையில் தரம் பிரித்து வகைப்படுத்துவது ஒரு ஜெம்மாலஜிஸ்ட்டின் பணியாகும். மேலும் அவை சேதமாகாமல் தடுக்கும் வழிகளையும் அவர்கள் கண்டுபிடிக்க முயல்கின்றனர்.

விலை உயர்ந்த கற்கள்  மற்றும் தங்க நகை தொழிலானது, இந்தியாவில் அதிகம் பணம் புரளும் தொழில்களில் ஒன்றாகும். இந்தியாவின் வைரத் தொழில்துறையானது, உலக அளவில் புகழ்பெற்றது. அணிந்தால் மதிப்பு தரக் கூடியதாகவும், ஏற்றுமதி பொருளாகவும் இருப்பதால் வைரங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. இன்றைய நிலையில் நமது குணாதிசயத்திலும், அதிர்ஷ்டத்திலும் ஆதிக்கம் செலுத்தக் கூடிய பொருளாக ரத்தின கற்கள் மதிக்கப்படுகின்றன.

மேலும் தங்கம் மற்றும் வைர நகைகளில் புதிய டிசைன்கள் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்படுவதால் இத்துறையில் நிபுணர்களுக்கான தேவை அதிகம் உள்ளது. மக்களின் ரசனைகளை கருத்தில் கொண்டு செயல்படுபவர்களாக அவர்கள் இருப்பின் விரைவில் முன்னேற முடியும்.
நல்ல கிரகிக்கும் திறன், கற்பனை மற்றும் படைப்பாக்கத்திறன், வண்ணப் பொருத்தம் பற்றிய அறிவு, அழகுணர்ச்சி, பாரம்பரிய வடிவமைப்புகளை பற்றிய அறிமுகம், கடின உழைப்புடன் கூடிய சிறந்த தகவல் தொடர்பு திறன் போன்றவை அவசியம்.

இத்துறையில் வடிவமைப்பாளர், மேலாளர், உற்பத்தியாளர், ஆராய்ச்சியாளர், தொழில்நுட்ப மதிப்பீட்டாளர் அல்லது இத்துறை சார்ந்த கல்வி நிறுவனத்தில் பயிற்றுவிப்பவர் என பல்வேறு வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. இவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யலாம்.இத்துறை சார்ந்த பல்வேறு படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள்:

Arch Academy of Design, Jaipur. www.archedu.org.
Delhi Gems and Jewellery Institute, New Delhi.
Gemcraft Jewellery Institute, New Delhi.
Gemmological Institute of India, Mumbai.
Indian Institute of Gemmology, New Delhi
Indian Institute of Jewellery, Mumbai.
St. Xavier's College, Mumbai.
Shingar Institute, Kolkata.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக