ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

வெள்ளை மாளிகையில் தலாய்லாமா ஒபாமா சந்திப்பு சீனா கடும் எதிர்ப்ப

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperவாஷிங்டன்: புத்தமதத் தலைவர் தலாய்லாமா 11 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவரது 76வது பிறந்தாள் கொண்டாட்டத்தை அமெரிக்காவில் உள்ள திபெத்தியர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவை, சந்தித்து பேச தலாய்லாமா விருப்பம் தெரிவித்திருந்தார். வெள்ளை மாளிகையில் இருவரும் சந்தித்து பேச நேற்று நேரம் ஒதுக்கப்பட்டது. இத்தகவல் வெளியானதும், சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹாங் லே வெள்ளை மாளிகைக்கு அவசர தகவல் அனுப்பினார். அதில், ÔÔதலாய்லாமாவை வெளிநாட்டு தலைவர்கள் சந்திப்பதை நாங்கள் எதிர்க்கிறோம். திபெத் சீனாவின் ஒரு அங்கம். அதன் சுதந்திரத்தை நாங்கள் எதிர்க்கிறோம். எங்களின் கொள்கைக்கு அமெரிக்கா மதிப்பளிக்க வேண்டும். தலாய்லாமாவுடன் ஒபாமா சந்திக்கும் நிகழ்ச்சியை  ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் இருநாட்டு உறவுகள் பாதிக்கும்ÕÕ என கூறியிருந்தார்.
ஆனால் இதை வெள்ளை மாளிகை கண்டுகொள்ளவில்லை. வெள்ளை மாளிகையில் தலாய்லாமாவை, அதிபர் ஒபாமா நேற்று சந்தித்து பேசினார். இருவரும் 45 நிமிடங்கள் தனியாக பேசினர். திபெத்தின் பண்பாடு, மனித உரிமை பாதுகாப்பு ஆகியவற்றுக்கு ஒபாமா ஆதரவு தெரிவித்தார். வேறுபாடுகள் நீங்க தலாய்லாமா பிரதிநிதிகளுடன், சீன அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
ஆனால், இந்த சந்திப்புக்கு வெள்ளை மாளிகை அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. வெளிநாட்டு தலைவர்களை, வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் அதிபர் ஒபாமா சந்திப்பது வழக்கம். ஆனால் தலாய்லாமாவை வெள்ளை மாளிகையின் மேப் ரூமில் சந்தித்து பேசினார் ஒபாமா. இந்த சந்திப்பு குறித்த மீடியா பேட்டிக்கும் வெள்ளை மாளிகை ஏற்பாடு செய்யவில்லை. சீனாவின் எதிர்ப்பை மீறி தலாய்லாமாவை கடந்த ஆண்டும் அதிபர் ஒபாமா சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக