சென்னை, ஜூன்.29: அடுத்த மாதம் நடைபெற உள்ள மாநிலங்களவை எம்பி பதவிக்கான தேர்தலில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக வில்லியம் ரபி பெர்னார்ட் போட்டியிடுவார் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
ஜூலை மாதம் 22-ம் தேதி மாநிலங்களவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
இதுகுறித்து அதிமுக வெளியிட்ட செய்திக்குறிப்பு:
முதல்வர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் இன்று காலை அதிமுக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள அவைத் தலைவர் இ. மதுசூதனன், கழகப் பொருளாளரும், நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், கழக அமைப்புச் செயலாளர் டாக்டர் திருமதி விசாலாட்சி நெடுஞ்செழியன், கழக அமைப்புச் செயலாளரும், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சருமான சொ. கருப்பசாமி, முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.பி.எம். சையதுகான், கழக சிறுபான்மையினர் நலப் பிரிவுத் தலைவர் ஏ. ஜஸ்டின் செல்வராஜ் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து, முதல்வர் ஜெயலலிதா தலைமையில், அதிமுக ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், 22.7.2011 அன்று நடைபெற உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டார்.
அதன்படி அதிமுக வேட்பாளராக ரபி பெர்னார்ட் போட்டியிடுவார் என்று அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக