[ நித்தியபாரதி ] விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்றுக் கருதப்படுவோரால் கொள்வனவு செய்யப்பட்ட படகு ஒன்றில், 300 பேர் கொண்ட குழுவொன்று மலேசியாவிலிருந்து புறப்படத் தயாராகவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தப் படகின் இயந்திரம் பழுதுபடாத சந்தர்ப்பத்தில், இந்தக் குழுவினர் அவுஸ்திரேலியா அல்லது கனடாவின் கரையோரத்தைச் சென்றடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தோனேசியாவில் கொள்வனவு செய்யப்பட்டுள்ள இந்தப் படகானது யூலை மாதத்தின் நடுப்பகுதியில் தனது பயணத்தை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்தப் படகு ஏற்கனவே பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த நாளில் புறப்படவில்லை.
வானிலை மற்றும் பாதுகாப்புக் காரணங்களாலேயே முன்னைய பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக பயணத்தை ஒழுங்குபடுத்தியவர்கள் தெரிவித்துள்ளனர்.
தாய்லாந்தைத் தளமாகக் கொண்டு இயங்கும் இந்த ஆட்கடத்தல் நடவடிக்கையில், தெகிவளையை வசிப்பிடமாகக் முகவரியாகக் கொண்ட வவுனியாவைச் சேர்ந்த பாலச்சந்திரன் மற்றும் இவரது உதவியாளரான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுந்தரம், பிரித்தானியக் கடவுச்சீட்டைக் கொண்டுள்ள முன்னாள் யாழ்ப்பாண வாசியான சதீஸ் ஆகியோர் ஈடுபட்டுள்ளதாகப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மூவர் தொடர்பாக தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் குடிவரவு அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தப் படகில் பயணம் மேற்கொள்ளவுள்ள 300 பேரில் அதிகளவானோர் சிறிலங்கா மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் அனைவரும் தமிழர்கள் அல்ல.
பயங்கரமானதும் ஆபத்துமிக்கதுமான கடற்பயணத்திற்காகக் காத்திருக்கின்ற இவர்களில் சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்களும் உள்ளனர்.
மேற்குறிப்பிட்ட மூன்று ஆட்கடத்தல்காரர்களிடம் படகில் பயணம் செய்வதற்காக பயணிகள் ஒவ்வொருவரும் 20,000 அமெரிக்க டொலர் வரை கட்டணமாகச் செலுத்தியுள்ளனர்.
இவர்களில் சிலர் தமக்கான கட்டணத்தை சிறிலங்காவிலும், ஏனையோர் சிறிலங்கா மற்றும் மலேசியா ஆகிய இரு இடங்களிலும் செலுத்தியிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொக்கோஸ் தீவை அடைந்ததும், அவுஸ்திரேலிய அதிகாரிகள் அவர்களிடம் கேள்வி கேட்கும் போது படகில் உள்ள அனைவரும் சிறிலங்காவைச் சேர்ந்தவர்கள் எனப் பதிலளிக்க வேண்டும் என்றும் இந்தப் பயணிகளிடம் பயண முகவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக