ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

கலைஞர் காப்பீட்டு திட்டம், வீட்டுவசதி திட்டம் ரத்து; புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணி நிறுத்தம்; அண்ணா பல்கலைக்கழக கிளைகள் மூடல்!

கலைஞர் காப்பீட்டு திட்டம், வீட்டுவசதி திட்டம் ரத்து; புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணி நிறுத்தம்; அண்ணா பல்கலைக்கழக கிளைகள் மூடல்!
சென்னை: கலைஞர் காப்பீட்டுத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணிகள் நிறுத்திவைக்கப்படுகின்றன. கட்டுமானப் பணிகள் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்தப்படும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள 14வது சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை அவை கூடியதும் ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா தனது உரையை படித்தார்.
உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:
- 3வது முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்துள்ள ஜெயலலிதாவுக்கும், பெரும் வெற்றியுடன் ஆட்சி அமைத்துள்ள அதிமுகவுக்கும் வாழ்த்துகளைத்  தெரிவித்துக் கொள்கிறேன்.
- புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதுவரை நடந்த கட்டுமானப் பணிகள் குறித்து விசாரணை நடத்தப்படும். ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெறும்.
- சென்னையில் மோனோ ரயில் திட்டம் அமல்படுத்தப்படும். முதல் கட்டமாக 111 கிலோமீட்டர் தொலைவுக்கு மோனோ ரயில் திட்டம் அமல்படுத்தப்படும்.
தற்போது நடந்து வரும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முடிய கால தாமதமாகும் என்பதால் மோனோ ரயில் அறிமுகப்படுத்தப்படுகிறது. படிப்படியாக இது 300 கிலோமீட்டர் தொலைவுக்கு அதிகரிக்கப்படும். மெட்ரோ ரயில் திட்டம் 45 கிலோமீட்டருக்கு மட்டுமே அமல்படுத்தப்படும்.
- மதுரை, கோவை, திருச்சியிலும் மோனோ ரயில் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
- 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப்கள் வழங்கப்படும்.
- கலைஞர் காப்பீட்டுத் திட்டம் ரத்து செய்யப்படுகிறது. அதற்குப் பதில் புதிய பொது மருத்துவ காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்தப்படும்.
- விலைவாசியைக் கட்டுப்படுத்த பொது விநியோகத் திட்டம் வலுப்படுத்தப்படும். கள்ளச்சந்தை, பதுக்கலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் தற்போது இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழகங்கள் இணைக்கப்பட்டு சென்னையில் மட்டுமே இனி அண்ணா பல்கலைக்கழகம் இயங்கும்.
செப்டம்பர் 15 முதல் இலவச – மிக்சி கிரைண்டர்
- எம்.ஜி.ஆரால் கலைக்கப்பட்ட சட்ட மேலவையை மீண்டும் கொண்டு வரப் போவதில்லை.
- அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் இலவச மிக்சி கிரைண்டர் வழங்கப்படும்.
- அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் 9.12 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும்.
- சமச்சீர் கல்வித் திட்டம் செம்மையாக்கப்படும். சமச்சீர் கல்வி பாடத்திட்டத்துக்கான பரிந்துரையை அளிக்க வல்லுநர் குழு அமைக்கப்படும்.
- சட்டம் ஒழுங்கு நிலைநாட்டுதல், பொருளாதாரத்தை மேம்படுத்துவதே முதன்மைப் பணி.
- மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு ரூ. 1000லிருந்து ரூ. 2000 வழங்க உத்தரவு.
- மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 6ம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
- மாநிலங்களுக்கிடையிலான நதி நீர்ப் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை.
- மத்திய, மாநில அரசுகளுக்கிடையே சுமூக உறவு ஏற்படும் வகையில் அதிமுக அரசு செயல்படும்.
- மரபு சாரா எரிசக்தி மூலம் மின்உற்பத்தி செய்ய தனிக் கொள்கை வகுக்கப்படும்.
- 500க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட கிராமங்களுக்கு தார்ச்சாலகள் அமைக்கபபடும்.
- பொது மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு தனியார் கேபிள் டிவி சேவை அரசுடமையாக்கப்படும்.
- சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் தொடங்கப்படும்.
தமிழ்நாடு 2025 தொலைநோக்குத் திட்டம்
- தமிழ்நாடு 2025 தொலைநோக்குத் திட்டம் வகுக்கப்படும்.
- தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சிமொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 3 மாதத்திலிருந்து 6 மாதமாக உயர்த்தப்படும்.
- நீதிமன்றத்தில் தமிழை பயன்படுத்த வலியுறுத்தப்படும்.
சமச்சீர் கல்வி மறு ஆய்வு
-சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்துவதற்கு முன் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும். சமச்சீர் கல்வி பாடத்திட்டத்துக்கான பரிந்துரை அளிக்க புதிய வல்லுநர் குழு அமைக்கப்படும்.
கலைஞர் வீட்டு வசதித் திட்டம் நிறுத்தம்
-கிராமப்புற ஏழைகளுக்கான கலைஞர் வீட்டு வசதித் திட்டம் ரத்து செய்யப்படுகிறது. புதிதாக சூரிய மின்சக்தியுடன் பசுமை வீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த புதிய திட்டத்தின் கீழ் 1.8 லட்சம் செலவில் அரசே வீடு கட்டி பயனாளிகளுக்கு தரும். நகர்ப்புற ஏழைகளுக்கு மத்திய அரசு நிதியை ஒருங்கிணைத்து வீட்டுவசதித் திட்டம் செயல்படுத்தப்படும்.
பாலிதீன் பைகளுக்குத் தடை
- சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்த அரசு சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ளும். கிராமபுறங்களையும், நகர்ப்புறங்களையும் தூய்மைப்படுத்த ஒரு சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மக்கிப் போகாதா பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் பயன்படுத்துவதை தவிர்க்கும் பொருட்டு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு சிறப்பு தகவல் கல்வி திட்டம் தொடங்கப்படும்.
முதன் முறையாகவோ அல்லது மறுசுழற்சி மூலமோ தயாரிக்கப்படும் 60 மைக்ரான் மற்றும் 8க்கு 12 அளவுக்கு குறைவான பாலிதின் பைகளுக்கு தடை விதிக்கப்படும்.
இந்திய தர நிர்ணயக் கழகத்தால் நிர்ணயிக்கப்பட்ட விதிகளுக்குட்பட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கான மறு சுழற்சி முறை கடுமையாக ஒழுங்கு முறைப்படுத்தப்படும்.
இலங்கை தமிழர் மறுவாழ்வு
-இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்படும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக