கவர்னர் உரை குறித்து சட்டசபை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து கூறியதாவது:-
ஆளுநர் உரையில் தி.மு.க. அரசின் பல்வேறு திட்டங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. சில திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. ஒரு அரசு கடந்த கால திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றினால்தான் திட்டத்தின் பயன் மக்களை முழுமையாக சென்றடையும்.
வளர்ச்சி பணிகள் நேர்கோர்ட்டில் செல்லவேண் டும். ஆனால் கவர்னர் உரையில் திட்டங்கள் நேர்கோட்டில் செல்லாமல் குறுகிய பாதையில் கோணல்மானலாக செல்கிறது. இதனால் மக்களுக்கு உரிய பலன் போய் சேராது.
ஒரு அறுசுவை உணவு என்பது சாப்பாடு குழம்பு, கூட்டு, தயிர் போன்ற பலவகை கொண்டதாகும். ஆனால் கவர்னர் உரையில் கூட்டு மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. எனவே இது அறுசுவை உணவாகாது.
கவர்னர் உரையில் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.
கேள்வி:- புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும், இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப் போவதாகவும் அரசு முடிவுவெடுத்து இருப்பதாக கவர்னர் உரையில் கூறப்பட்டுள்ளதே?
பதில்:- தி.மு.க.வை பொறுத்தவரை எத்தனையோ விசாரணை கமிஷனை சந்தித்து உள்ளது. அதேபோல் இதையும் சந்திப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக