தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக மிரட்டி, உருட்டி, விரட்டி 63 தொகுதிகளை சப்ஜாடாக வாங்கிய காங்கிரஸ் கட்சி, உட்கட்சிப் பூசல், ஒருவரை ஒருவர் காலை வாரி விடுவது, போட்டி வேட்பாளர்கள், துரோகம், முதுகில் குத்துவது, ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழர்களுக்கு துரோகம் செய்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படு தோல்வியைச் சந்தித்துள்ளது. வெறும் 5 தொகுதிகளில் மட்டும் இக்கட்சி வெற்றி பெற்றது.
அதை விட கேவலமாக கட்சித் தலைவர் தங்கபாலு மயிலாப்பூர் தொகுதியில் படு தோல்வியைச் சந்தித்துள்ளார்.
கட்சி வேட்பாளர்கள் தேர்வில் தங்கபாலு செய்த மோசடித் தனம், வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்களிடம் காசு வாங்கி விட்டதாக எழுந்த புகார்கள் போன்றவை காரணமாக தங்கபாலு மீது காங்கிரஸார் கடும் காட்டத்துடன் இருந்தனர்.
தற்போது காங்கிரஸ் கட்சி கேவலமாக தோற்றுப் போய் விட்டதால் தங்கபாலு டீசன்ட்டாக பதவி விலக முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சட்டசபைத் தேர்தலில் பெற்ற முடிவுகளுக்குப் பொறுப்பேற்று நான் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறேன். விரைவில் எனது ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பவுள்ளேன் என்றார்.
காங்கிரஸ் மேலிடம் தன் மீது கை வைப்பதற்கு முன்பு தானே விலகி விடுவது நல்லது என்று நினைத்தே தங்கபாலு இந்த முடிவை அறிவித்திருப்பதாக தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக