சென்னை: சட்டசபை தேமுதிக தலைவராக இன்று மாலை விஜயகாந்த் தேர்வு செய்யப்படவுள்ளார். இதையடுத்து அவர் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராகிறார்.
தேமுதிக சார்பில் போட்டியிட்டு வென்ற எம்.எல்.ஏக்களின் முதல் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமைக் கழக அலுவலகத்தில் இதற்காக புதிய எம்.எல்.ஏக்கள் கூடியுள்ளனர்.இன்று மாலை எம்.எல்.ஏக்களின் கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்கு விஜயகாந்த் தலைமை தாங்குகிறார். அப்போது, விஜயகாந்த்தை சட்டசபை கட்சித் தலைவராக எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்கின்றனர்.
சட்டசபையில் அதிமுகவுக்கு அடுத்து அதிக இடங்களில் வென்றுள்ள கட்சி தேமுதிகதான். எனவே இக்கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து கிடைத்துள்ளது. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகிறார். தேமுதிகவுக்கு அடுத்த இடத்தில்தான் திமுக அமரப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக