அவர் அன்று சொன்னது காமெடியாகப் பார்க்கப்பட்டது. இன்று கிட்டத்தட்ட அது நிஜமாகவே ஆகிவிட்டது.
தர்மபுரியில் தேர்தல் பிரச்சாரம் செய்த விஜயகாந்த், தனது கட்சி வேட்பாளர் பெயரை தவறுதலாக பாண்டியன் என்று கூறிவிட்டார். உடனே அருகில் இருந்த வேட்பாளர் தன் பெயர் பாஸ்கர் என்று கூற, வேனிலேயே அவரை ஓங்கி அடித்தார். இதை பெரிய அளவில் பிரச்சாரமாக்கி விஜயகாந்தை கிண்டலடித்தார் வடிவேலு.
பின்னர், தான் அடித்ததை நியாயப்படுத்திய விஜயகாந்த், "என் ஆளைத்தானே அடிச்சேன். இதில் மற்றவர்களுக்கென்ன... என்கிட்ட அடிவாங்கினவன் மகாராஜனாகிவிடுவான்", என்றார்.
இப்போது அந்த வேட்பாளருக்கு மகாராஜனாகும் யோகம் வந்துவிட்டது. தர்மபுரி தொகுதியில் 4500 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார் பாஸ்கர்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக