ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

செருப்பு அணியாமல் பணியாற்றும் தமிழக அமைச்சர் : ஜெயலலிதா பக்தி

                                      !இது கொஞ்சம் ஓவர்

புதிதாக தேர்வு செய்யப்பட்ட, தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்ச்சி நேற்று திங்கட்கிழமை, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடந்தது. அப்போது தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செருப்பு அணியாமல் வந்து பதவி ஏற்றார். கோவிலுக்கு ஏதாவது வேண்டுதலாக இருக்கும் என்றும், அதனால்தான் செருப்பு அணியாமல் வந்துள்ளார் என்றும் பேரவையில் உறுப்பினர்கள் பேசிக் கொண்டனர்.
இதுபற்றி அவரிடம் கேட்டதற்கு,  "கோவிலுக்குள் எப்படி செருப்பு அணிந்து செல்லக் கூடாதோ அதேபோல, முதல்வர் ஜெயலலிதா இருக்கும் இடத்தில் நான் செருப்பு அணிந்து செல்ல மாட்டேன்” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், “முதல்வர் இருக்கும் இடம்தான் எனக்குக் கோவில். எனவே முதல்வரின் வீடு, அவர் ஆட்சி செய்யும் தலைமைச் செயலக வளாகம், இப்போது பதவி ஏற்ற சட்டப்பேரவை என எந்த இடத்திலும் நான் செருப்பு அணிவதில்லை.” என்று கூறினார்.
அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர். சாத்தூர் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 16ஆம் திகதி அன்று அவர் அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து, கடந்த ஒரு வார காலமாக தலைமைச் செயலகத்தில், செருப்பு அணியாமல்தான் பணிகளை கவனித்து வருவதாக அவரே தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக