அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ள தமிழக உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக தனித்துப் போட்டியிடும் என்று கூறப்படுகிறது.
அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்தது. திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி 63 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற முடிந்தது.
தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி தோல்விக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் தொகுதி உடன்பாட்டின் போதும் தேர்தல் பிரச்சாரங்களின் போதும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் நடந்து கொண்ட விதம்தான் தோல்விக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் மீது மக்களுக்கு இருந்த கோபம்தான் கூட்டணி தோல்விக்கு காரணமாகி விட்டதாக தி.மு.க. நிர்வாகிகள் பலர் கருதுகிறார்கள். எனவே காங்கிரசுடனான உறவு வேண்டாம் என்று பெரும்பாலான தி.மு.க.வினர் கூறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே வருகிற அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் தி.மு.க. தனித்துப் போட்டியிட வேண்டும் என்று அந்த கட்சி நிர்வாகிகள் மேலிடத் தலைவர்களிடம் வற்புறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக